Vagana Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ ஒன்றுக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வாங்கும் யோகம் யாருக்கு?
பதவி, பட்டம், அதிகாரம், முன்னேற்றம், விவசாயம், விளைபொருட்கள், வாகன சுகம், வீடு, வாசல், சொத்து ஆகியவை 4 ஆம் இடத்தை சார்ந்து உள்ளது. எந்த ஒரு ஜாதகத்தில் 4ஆம் அதிபதி அதிக வலுபெற்று உள்ளாரோ அவர்களுக்கு வாகன யோகம் கட்டாயம் உண்டு.
ஜோதிடத்தில் வாகன யோகம் என்பது ஒருவரின் ஜாதகத்தில், சொந்த வாகனம் வாங்கி பயன்படுத்தும் பாக்கியத்தை குறிக்கும் ஒரு முக்கியமான அம்சமாகும். இது ஒருவரின் பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து ஆகியவற்றை குறிக்கும் வகையில் உள்ளது.
வாகனங்களை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. கார் உள்ளிட்ட சொகுசு கார்களை வாங்குவது என்பது தற்போது அத்யாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. ஜோதிட சாஸ்திரத்தில் வாகன யோகம் குறித்து விரிவாக சொல்லப்பட்டு உள்ளது. இது முற்காலங்களில் கால்நடை யோகம் என்றும் விவரிக்கப்பட்டது. உங்கள் லக்னத்திற்கு 4ஆம் இடம் ஆனது இந்த வாகன யோகம் குறித்து விவரிக்கும் இடமாக உள்ளது.
பதவி, பட்டம், அதிகாரம், முன்னேற்றம், விவசாயம், விளைபொருட்கள், வாகன சுகம், வீடு, வாசல், சொத்து ஆகியவை 4 ஆம் இடத்தை சார்ந்து உள்ளது. எந்த ஒரு ஜாதகத்தில் 4ஆம் அதிபதி அதிக வலுபெற்று உள்ளாரோ அவர்களுக்கு வாகன யோகம் கட்டாயம் உண்டு.
ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பதில் சுக்கிர பகவான் முக்கிய பங்கு வகிப்பார். எந்த ஜாதக்த்திலும் 4ஆம் அதிபதி வலுபெற்று இருந்தாலோ அல்லது சுக்கிரன் வலுப்பெற்று இருந்தாலோ வாகன சுகம் கட்டாயம் இருக்கும்.
12 லக்னங்களுக்கான பலன்கள்
மேஷம் லக்னத்திற்கு சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
ரிஷபம் லக்னத்திற்கு சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலுப்பெற்று இருக்க வேண்டும். அதே நேரத்தில் சந்திரனும் வாகனகாரகனாக உள்ளார்.
மிதுனம் லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சந்திரன் ஆகியோர் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
கடகம் லக்னத்திற்கு சுக்கிரன், சந்திரன் ஆகியோர் வலுப்பெற்று இருக்க வேண்டும். மிகவும் பழமையான வாகனங்களை நீண்ட காலம் பராமரிக்கும் திறன் இவர்களுக்கு உண்டு.
சிம்ம லக்னத்திற்கு செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகியோர் வலுத்து இருக்க வேண்டும்.
கன்னி லக்னத்திற்கு குரு, சுக்கிரன், சந்திரன் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
துலாம் லக்னத்திற்கு சனி பகவான் வலுத்தால் கனரக வாகனங்களும், சுக்கிரன் வலுத்தால் சொகுசு வாகனங்கள் இருக்கும்.
விருச்சிகம் லக்னத்திற்கு சனி, சுக்கிரன் ஆகியோர் வலுத்து இருக்க வேண்டும்.
தனுசு லக்னத்திற்கு குரு, சுக்கிரன், சந்திரன் ஆகியோர் வலுப்பெற்று இருக்க வேண்டும்.
மகரம் லக்னத்திற்கு சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் வலுப்பெற்று இருக்க வேண்டும். செவ்வாயும், சுக்கிரனும் தொடர்பு கொண்டு பிரகு மங்கள யோகம் கொண்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகன யோகம் கிடைக்கும்.
கும்பம் லக்னத்திற்கு சுக்கிரன், சந்திரன் வலுத்து இருப்பது வாகன யோகத்தை உண்டாக்கும்.
மீன லக்னத்திற்கு புதன், சந்திரனின் வலு வாகன சுகத்தை உண்டாக்கித் தரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!