Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்களுக்கு பணத்தை கொட்ட வைக்கும் 11ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!-11th house in astrology gains and losses of strength - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்களுக்கு பணத்தை கொட்ட வைக்கும் 11ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!

Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்களுக்கு பணத்தை கொட்ட வைக்கும் 11ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Aug 31, 2024 05:30 PM IST

சர லக்னங்கள் உட்பட அனைத்து லக்னங்களுக்கும் 11ஆம் இடத்தில் அமரும் எந்த இடமும் ஜாதகருக்கு கெடுதலை செய்யாது. எல்லா லக்னத்திற்கும் 11ஆம் இடத்தில் இருக்கும் நட்சத்திர நாதர்கள் அவர்களின் நண்பர்களாக இருப்பார்கள் என்பதுதான் இதன் நிலை ஆகும்.

Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்களுக்கு பணத்தை கொட்ட வைக்கும் 11ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!
Astrological Insights: ’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்களுக்கு பணத்தை கொட்ட வைக்கும் 11ஆம் இடம் சொல்லும் ரகசியங்கள்!

சர லக்னங்கள் உட்பட அனைத்து லக்னங்களுக்கும் 11ஆம் இடத்தில் அமரும் எந்த இடமும் ஜாதகருக்கு கெடுதலை செய்யாது. எல்லா லக்னத்திற்கும் 11ஆம் இடத்தில் இருக்கும் நட்சத்திர நாதர்கள் அவர்களின் நண்பர்களாக இருப்பார்கள் என்பதுதான் இதன் நிலை ஆகும். 

உதாரணமாக மேஷம் லக்னத்தை எடுத்துக் கொள்வோம். இதன் 11ஆம் இடமாக கும்பம் உள்ளது. கும்பத்திற்குள் செவ்வாய் பகவானின் நட்சத்திரமான அவிட்டம் 3, 4 பாதம், குரு பகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரம் 1, 2, 3 பாதங்கள் மற்றும் சதயம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. இதில் செவ்வாய் மேஷம் ராசிக்கு லக்னாதிபதி ஆவார். குரு பகவான் பாக்யாதிபதி ஆவார். 

ரிஷபம் லக்னத்திற்கு 11ஆம் இடம் மீனம் ஆகும். இதில் உத்ரட்டாதி எனும் சனியின் நட்சத்திரமும், ரேவதி எனும் புதனின் நட்சத்திரமும் சுக்கிரனுக்கு அதி நட்பு கிரகங்கள் ஆகும். 

மிதுனம் லக்னத்திற்கு 11ஆம் இடம் மேஷம் ஆகும். இதில் சூரியனின் கார்த்திகை 1ஆம் பாதம், சுக்கிரனின் நட்சத்திரமான பரணியும் உள்ளது. 

கடகம் லக்னத்திற்கு 11ஆம் இடம் ரிஷபம் ராசி ஆகும். இதில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோரின் நட்சத்திரம் உள்ளது. 

சிம்மம் லக்னத்திற்கு 11ஆம் இடம் மிதுனம் ஆகும். இதில் செவ்வாயின் மிருகசீரிடம், குருவின் புணர்பூசம் உள்ளது. 

கன்னி லக்னத்திற்கு 11ஆம் இடம் கடகம் ஆகும். இதில் சனி பகவானின் பூசம், புதன் பகவானின் ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. 

துலாம் லக்னத்திற்கு 11ஆம் இடம் சிம்மம் ஆகும். இதில் சுக்கிரன், கேது ஆகியோரின் நட்சத்திரங்கள் உள்ளது. 

விருச்சிகம் லக்னத்திற்கு 11ஆம் இடம் கன்னி ஆகும். இதில் செவ்வாய், சந்திரன், சூரியனின் நட்சத்திரங்கள் உள்ளது. 

தனுசு லக்னத்திற்கு 11ஆம் இடமாக துலாம் உள்ளது. இங்கு குரு, செவ்வாய் ஆகியோரின் நட்சத்திரங்கள் உள்ளது. 

மகரம் லக்னத்திற்கு 11ஆம் இடமாக விருச்சிகம் உள்ளது. சனி பகவான் மற்றும் புதன் பகவானின் நட்சத்திரம் மற்றும் சம கிரகமான குரு பகவானின் நட்சத்திரமும் உள்ளது. 

கும்பம் லக்னத்திற்கு 11ஆம் இடம் தனுசு ஆகும். சுக்கிரன், கேது ஆகியோரின் நட்சத்திரங்கள் உள்ளது. 

மீன லக்னத்திற்கு 11ஆம் இடம் மகரம் ஆகும். இதில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோரின் நட்சத்திரங்கள் உள்ளது. 

வெற்றி ஸ்தானம் ஆன 11ஆம் இடம் ஜாதகருக்கு பெரிய நன்மைகளை கொடுக்கும் வகையில் இருக்கும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!