Makaram Money Luck: ’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!-unlocking the millionaire yogam for makaram rasi with avitam nakshatra - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Makaram Money Luck: ’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!

Makaram Money Luck: ’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!

Kathiravan V HT Tamil
Aug 12, 2024 09:54 PM IST

குரு, சனி, புதன் ஆகிய தசைகள் வருகின்றது. மகரம் ராசிக்கு 35 முதல் 60 வயது வரை உள்ள சனி தசையும், அதற்கு பின்னர் வரும் புதன் தசையும் மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடும்.

Makaram Money Luck: ’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!
Makaram Money Luck: ’மகரம் ராசி, அவிட்டம் நட்சத்திரத்திற்கு கோடீஸ்வர யோகம் எப்போது?’ ஏற்றி விட போகும் குரு, சனி, புதன்!

வாழ்கையில் முன்னேறத் தூண்டும் லட்சியம் 

நமது வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக உள்ளது. வாழ்கை என்பது ஒரு ஓட்டப்பந்தயம் போன்றது, ஆனால் அதில் வெற்றி பெற வேண்டும் என லட்சியம் பலருக்கும் உள்ளது. ஒருவரது ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி வரும் போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் நம்மை வெற்றியின் பாதையில் அழைத்து செல்லக்கூடியதாக இருக்கும். 

சனியும் செவ்வாயும்

மகரம் ராசிக்கு அதிபதியாக சனி பகவான் உள்ளார். மகரம் ராசிக்காரர்களை சனி பகவான் கெடுக்கமாட்டார். ஏழரை சனி காலத்தில் கூட ஆட்டிப்பார்பாரே தவிர கெடுக்கமாட்டார். மகரம் ராசியில் உள்ள அவிட்டம் நட்சத்திரத்திற்கு செவ்வாய் பகவான் அதிபதியாக உள்ளார். 4 மற்றும் 11ஆம் வீட்டுக்கு உடையவராக செவ்வாய் பகவான் உள்ளார். வீடு, மனை, வாகனம் ஆகிய செல்வங்களின் அதிபதியாகவும் செவ்வாய் பகவான் உள்ளார். 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதலில் செவ்வாய் திசையும், அதன் பின்னர் 18 ஆண்டுகளுக்கு ராகு திசையும் இருக்கும். இந்த இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ள கூடிய உடல் வலிமை இருக்கும். 

ஏற்றி விடப்போகும் குரு, சனி, புதன்!

அதற்கு பிறகு குரு, சனி, புதன் ஆகிய தசைகள் வருகின்றது. மகரம் ராசிக்கு 35 முதல் 60 வயது வரை உள்ள சனி தசையும், அதற்கு பின்னர் வரும் புதன் தசையும் மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடும். 

வழிபாடுகள் 

குரு திசையை பொறுத்தவரை, நமது ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று இருக்க வேண்டும். குரு மீது மரியாதை கொள்ளுதல் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும். சனி பகவானுக்கு தனி சந்நிதிகள் உள்ள கோயிலுக்கு ஆண்டு தோறும் செல்லும் மகரம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறையாவது மலை பிரதேசங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு இருக்க வேண்டும். யானை என்பது குருவின் அம்சம் ஆகும். யானையின் ஆசிர்வாதத்தை வாங்கி வேண்டும். வெள்ளி ஆபரணங்களை மகரம் ராசிக்காரர்கள் அணிந்து கொள்வது ஏற்றத்தை கொடுக்கும்.  திருச்செந்தூர் முருகன், பெருமாளை வணங்கி வர வாழ்கையில் மேலும் சிறப்புகள் உண்டாகும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.