Lucky Rasis : ராகு கேதுவின் இடமாற்றம்.. சுப பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் இவர்கள்தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky Rasis : ராகு கேதுவின் இடமாற்றம்.. சுப பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் இவர்கள்தான்!

Lucky Rasis : ராகு கேதுவின் இடமாற்றம்.. சுப பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் இவர்கள்தான்!

Divya Sekar HT Tamil
Dec 11, 2023 08:00 AM IST

ராகு கேதுவின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் சுபயோகத்தை பெறப்போகின்றனர்.

ராகு கேது
ராகு கேது

ராகு கேது இருவரும் கடந்த அக்டோபர் 30-ம் தேதி அன்று தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடமாற்றம் செய்தனர். இவர்களின் பயணத்தால் வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

ராகு கேதுவின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் சுபயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

ராகு கேது உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சியையும் கொடுக்கப் போகின்றனர். மற்றவர் செய்ய தயங்கும் செயலையும் நீங்கள் தைரியமாக செய்வீர்கள். குரு பகவானின் பார்வை இருப்பதால் பணவரவில் எந்த குறையும் இருக்காது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்ப ராசி

ராகு மற்றும் கேது உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் எந்த சிக்கல்களும் இருக்காது. மற்றவர்களிடம் வாக்கு கொடுக்கும். போது கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

தனுசு ராசி

ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பண இழப்பு ஏற்பட்டாலும் சேமிப்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொறுமையாக இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner