Richest Temples: ’அயோத்திக்கு முன்பு வரை!' இந்தியாவின் டாப் 10 பணக்கார கோயில்கள் விவரம் இதோ!
”பக்தர்களின் வருகை, செலுத்தக்கூடிய காணிக்கை, கோயில்களின் செத்து விவரங்களின் அடிப்படையில் வெளியாகி உள்ளது”
அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அதிக செல்வம் கொண்ட கோயில்கள் என்ன என்ற தேடுதல் இணைய தளங்களில் அதிகரித்துள்ளன. பக்தர்களின் வருகை, செலுத்தக்கூடிய காணிக்கை, கோயில்களின் செத்து விவரங்களின் அடிப்படையில் வெளியாகி உள்ளது.
சோமநாதர் கோயில், குஜராத்
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சோமநாதர் கோயில், இந்தியாவில் உள்ள பன்னிரெண்டு புனித ஜோதிர் லிங்கங்களில் முதல் தலமாக உள்ளது.
கோயிலின் உட்புறத்தில் 130 கிலோ தங்கமும், அதன் கோபுரத்தில் 150 கிலோ தங்கமும் உள்ளது. 2023 ஆம் ஆண்டில், கோயில் அறக்கட்டளையின் கீழ் சுமார் 6 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமாக 1700 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சொத்துக்கள் உள்ளது.
சித்திவிநாயகர் கோவில், மும்பை
இரண்டு நூற்றாண்டுகள் பழமை மிக்க மும்பை சித்தி விநாயகம் கோயில் நாட்டின் செல்வம் மிக்க திருக்கோயில்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள மூலவருக்கு நான்கு கிலோ தங்க அணிகலன்கள் உள்ளது. 125 கோடி ரூபாய் நிகர மதிப்பு தினசரி 30 லட்சம் ரூபாய் வருமானம் பதிவாகியுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில், மதுரை
தினசரி சராசரியாக சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செலும் ஆன்மீகத் தளமான மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 6 கோடி ரூபாய் ஆண்டு வருவாயை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி கோயிலுக்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் உள்ளது.
ஷீரடி சாய்பாபா கோயில், மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ள சாய்பாபா கோயில் இந்தியாவின் புகழ்பெற்ற வழிபாட்டு தளங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோயிலுக்கு கட்நத 2022ஆம் ஆண்டு 400 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஒரு நாளைக்கு 22 ஆயிரம் பேர் வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அமிர்தசரஸ் பொற்கோயில், பஞ்சாப்
சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயில் பஞ்சாப் பொற்கோயில், அதிகாரப்பூர்வமாக ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்தில் 1577ஆம் ஆண்டு சீக்கிய மத குரு ராம் தாஸால் இக்கோயில் நிறுவப்பட்டது.
பெரிய குளத்தின் நடுவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இக்குளம் அமிர்தசரஸ் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "அழியாத தேன்" என்று பொருள்படுகிறது. இந்த கோயிலில் 400 கிலோ தங்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் ஆண்டு வருவாய் 500 கோடியாக உள்ளது.
குருவாயூர் கிருஷ்ணன் கோயில், கேரளா
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயில் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மூலவர் நவநீதகிருஷ்ணர், பாலகிருஷ்ணராக, கையில் வெண்ணெய்யுடன் காட்சியளிக்கிறார்.
65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயிலின் பிரதான கோபுரம் 100 அடி உயரம் கொண்டது. கோயிலின் வெளிப்புற சுவரில் பல சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளன. இந்த கோயிலுக்கு 1737 கோடி ரூபாய் அளவுக்கு வைப்புத் தொகை உள்ளது. கோயிலுக்கு சொந்தமாக 271 ஏக்கர் நிலம் உள்ளது.
வைஷ்ணவி தேவி கோயில், ஜம்மு
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு புகழ்பெற்ற சக்திவழிபாட்டு தலமான வைஷ்ணவி தேவி கோயில் கத்ரா நகரத்திற்கு அருகில் உள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் 1800 கிலோ தங்கம் உள்ளது-. 2000 கோடி ரொக்கம் கோயில் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோயில், கேரளா
கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் சொத்துக்களின் மதிப்பு 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 10,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பு கோயிலின் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்களின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது.
பத்மநாபசாமி கோயில், கேரளா
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் மகாவிஷ்ணு அனந்தசயனம் கோலத்தில் காட்சி அளிக்கிறார். 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு சொந்தமாக 1.20 லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயில், ஆந்திர பிரதேசம்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு சொந்தமாக 3 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.