Today Rashi Palan (27.09.2024) இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 27) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 22, 2025 11:15 AMZodiac Signs: இந்த ராசிகள் வாழ்க்கை தலைகீழ் மாற்றம்.. குரு நட்சத்திர இடமாற்றத்தால் உருவான யோகம்.. என்ன நடக்கப்போகுது?
Mar 22, 2025 09:58 AMசூரிய கிரகணம் 2025: இந்த ராசிகள் வாழ்க்கை எப்படி மாறும்?.. சனி சூரிய கிரகணத்தன்று மாறுகிறார்.. என்ன நடக்கப்போகுதோ?
Mar 22, 2025 09:44 AMமே மாதம் கேது பெயர்ச்சி.. வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
Mar 22, 2025 07:54 AMபிறவியிலேயே லட்சுமி தேவியின் அருள் பெற்ற 5 ராசிகள் இதோ.. செல்வம், புகழ் குவியும் அந்த ராசிக்காரரா நீங்கள்!
Mar 22, 2025 07:00 AMGuru Transit 2025: குரு பெயர்ச்சி 2025 இல் ஜாக்பாட்.. இந்த ராசிகள் தலையெழுத்து மாறப்போக்து.. மே மாதம் குறி..!
Mar 22, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : கவலை வேண்டாம்.. கனவு நனவாகும் அதிர்ஷ்டம் யாருக்கு..இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
மேஷம்
பயணங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். பெற்றோரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் மறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
ரிஷபம்
மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.
கடகம்
பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். கல்வி பணிகளில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில செய்திகளால் அலைச்சல் அதிகரிக்கும். துணைவருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
சிம்மம்
ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். நண்பர்களின் கருத்துகளை புரிந்து முடிவெடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.
கன்னி
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வருங்கால சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளால் மதிப்பு அதிகரிக்கும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.
துலாம்
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதிகள் மேம்படும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் மறையும். இயந்திர பழுதுகளை சரி செய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். சேவை துறைகளில் இருப்போர்க்கு மேன்மை ஏற்படும்.
விருச்சிகம்
எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வியாபார நிலுவை பாக்கிகள் வசூலாகும். சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும்.
தனுசு
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். காப்பீடு சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். எழுத்து துறைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும்.
மகரம்
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமான பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். .
கும்பம்
மனதில் பணி மாற்ற சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத தன வரவும், அதற்கேற்ப செலவும் உண்டாகும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நெருக்கமானர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். மனதளவில் தைரியம் பிறக்கும்.
மீனம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

டாபிக்ஸ்