Today Rashi Palan (20.09.2024) 'கவலைகள் மறையும்..மகிழ்ச்சி உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!-today rashi palan daily horoscope tamil astrological prediction for 20 september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rashi Palan (20.09.2024) 'கவலைகள் மறையும்..மகிழ்ச்சி உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!

Today Rashi Palan (20.09.2024) 'கவலைகள் மறையும்..மகிழ்ச்சி உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Sep 20, 2024 05:00 AM IST

Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 20) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rashi Palan (20.09.2024) 'கவலைகள் மறையும்..மகிழ்ச்சி உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rashi Palan (20.09.2024) 'கவலைகள் மறையும்..மகிழ்ச்சி உண்டாகும்'.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம்

மற்றவர்கள் செயல்களில் தலையிடுவதை குறைக்கவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது அமைதியை கொடுக்கும். நினைத்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். இனம் புரியாத புதுவிதமான சிந்தனைகள் உருவாகும்.

ரிஷபம்

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் நீங்கும். பயனற்ற அலைச்சல்களை தவிர்க்கவும். கலை பணிகளில் சிந்தித்து செயல்படவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

மிதுனம்

தொழில் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சேமிப்பு மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்கள் மூலம் இனிமையான அனுபவங்கள் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கடகம்

வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியத்தில் சில மாற்றமான அனுபவம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும்.

சிம்மம்

அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசு துறைகளில் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சோர்வு விலகும் நாள்.

கன்னி

திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பணி நிமிர்த்தமான கோப்புகளில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.

துலாம்

பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். இனிமையான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும்.

விருச்சிகம்

பணிபுரியும் இடத்தில் உயர் பொறுப்புகள் கிடைக்கும். வரவுகள் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

தனுசு

வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்தீர்கள். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் காணப்படும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு கல்வியில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். 

கும்பம்

வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். விவசாய பணிகளில் கவனம் வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய வீடு நிமித்தமான கடன் உதவிகள் சாதகமாகும். அரசியல் துறைகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

மீனம்

திடீர் பயணங்களால் மேன்மை ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். வியாபார பணிகளில் இருந்த மந்த தன்மைகள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற வாக்குறுதிகளை குறைப்பது நல்லது. சமூகப் பணிகளில் கொள்கை பிடிப்பு தன்மை மேம்படும்.

Whats_app_banner

டாபிக்ஸ்