தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (14.05.2024): 'தைரியம் பிறக்கும்..புதிய அனுபவம் உண்டாகும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (14.05.2024): 'தைரியம் பிறக்கும்..புதிய அனுபவம் உண்டாகும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 14, 2024 05:33 AM IST

Today Horoscope, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 14) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (14.05.2024): 'தைரியம் பிறக்கும்..புதிய அனுபவம் உண்டாகும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan (14.05.2024): 'தைரியம் பிறக்கும்..புதிய அனுபவம் உண்டாகும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம்

தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சமூகப் பணிகளில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

ரிஷபம்

குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பயணங்களின் மூலம் சில அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் தைரியம் பிறக்கும்.

மிதுனம்

வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முனேற்றமான வாய்ப்புகள் அமையும்.

கடகம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

சிம்மம்

எதிர்பாராத சில உதவிகள் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தக பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மற்றவர்களின் செயல்பாடுகள் பற்றிய கருத்துகளில் கவனம் வேண்டும்.

கன்னி

வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். 

துலாம்

அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.

விருச்சிகம்

அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும்.  வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தனுசு

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். வீடு, வாகன தொடர்பான விரயங்கள் ஏற்படும்.  சகோதரர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

மகரம்

வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

கும்பம்

பொருளாதார சிக்கல்கள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணம் மேம்படும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு சில மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். .

மீனம்

குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செயல்படவும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்