Today Rashi Palan(19.09.2024): இன்றைய ராசிபலன்கள் ..மேஷம் முதல் மீனம் வரை..யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு தெரியுமா?
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 19) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
மேஷம்
எதையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் பொறுமை காக்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கும் மேம்படும்.
ரிஷபம்
குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்புக்கு உண்டன பாராட்டுகள் கிடைக்கும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்
வியாபார இடமாற்ற சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். சுப காரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.
சிம்மம்
இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். புதிய உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொன் பொருள்களில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும்.
கன்னி
சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும்.
துலாம்
வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் செல்ல நேரிடும்.
விருச்சிகம்
பொறுமையுடன் செயல்படுவது நல்லது. திடீர் பயணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். அறிவுத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
தனுசு
ஆன்மீக பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.
மகரம்
கல்வி முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
கும்பம்
தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும்.
மீனம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய வாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும்.

டாபிக்ஸ்