தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Avittam: வேலையில் பணம், பதிவி உயர்வு கிடைக்கும், எதிர்பாராத பயணங்கள் உண்டு! அவிட்டம் குரு பெயர்ச்சி

Guru Peyarchi 2024 Avittam: வேலையில் பணம், பதிவி உயர்வு கிடைக்கும், எதிர்பாராத பயணங்கள் உண்டு! அவிட்டம் குரு பெயர்ச்சி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 13, 2024 09:00 PM IST

அவிட்டம் நட்சத்திரம் முதல் இரண்டு பாதங்கள் மகரம் ராசியிலும், மூன்று மற்றும் நான்காம் பாதம் கும்பம் ராசியிலும் உள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பாராத பயணங்கள், செய்யும் வேலையில் பணம், பதிவி உயர்வு கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்தினருக்கு வேலையில் பணம், பதிவி உயர்வு கிடைக்கும்
அவிட்டம் நட்சத்தினருக்கு வேலையில் பணம், பதிவி உயர்வு கிடைக்கும்

அவிட்டம் நட்சத்தினர் மகரம், கும்பம் ஆகிய இரண்டு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும், மூன்று மற்றும் நான்காம் பாதம் கும்பம் ராசியிலும் உள்ளது.

குரு பெயர்ச்சியால் அவிட்டம் நட்சத்தினருக்கான பொதுப்பலன்கள்

அவிட்டம் நட்சத்தினர் செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் இருப்பீர்கள். கடந்த காலங்கள் இருந்த திருப்தியற்ற சூழ்நிலை மாறும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அமையும்.

பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. வருமானத்துக்கு ஏற்ற செலவினங்கள் இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

பேச்சில் நிதானம் தேவை. மற்றவர் பேச்சை காது கொடுத்து கேளுங்கள். தொழில் ரீதியாக பெரிய பாதிப்புகள் இருக்காது. யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். அரசு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. ஆட்டோமொபைலி, மெக்கானிக்கல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

வேலையை பொறுத்தவரை பெரிய பிரச்னைகள் இருக்காது. பதவி, உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சக பணியாளர்கள், மேலாளர் ஆதரவு எப்போதும் இருக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டு.

மகர ராசியில் இருக்கும் அவிட்ட நட்சத்தினர் தசாபுத்தி பலன்கள்

ராகு திசையில் இருப்பவர்கள் (24 வயது வரை) நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். மன ரீதியாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கேட்ட இடத்தில் கடனுதவி கிடைக்கும்.

குரு திசையில் இருப்பவர்கள் (40 வயது வரை) எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலுக்கு தேவைப்படும் உதவிகள் கிடைக்கும். திருமண வயதில் இருப்பவர்கள் எதிர்பார்த்த வரன் அமையும். பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். பணி சேமிப்பு உண்டு. உறவுகள் ரீதியாக இருந்து வந்த சண்டைகள் நீங்கும்.

சனி திசையில் இருப்பவர்கள் (59 வயது வரை) திருமணம், தொழில் ரீதியாக இருந்த வந்த பாதிப்புகள் நீங்கும். மனஅழுத்தங்கள் குறையும். நெருக்கடிகள் நீங்கும். கடன் சுமை குறையும். உடல் ரீதியாக இருந்து வந்த பிரச்னை அகலும். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்

புதன் (76 வயது வரை) மற்றும் கேது திசையில் (82 வயது வரை) இருப்பவர்களுக்கு வீடு கட்டும் யோகம் உண்டு. விடுபட்ட வேலைகள் நடக்கும். நிம்மதியான வாழ்க்கையை பெறுவீர்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்