Today Rashi Palan 07.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 07) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வர்த்தகப் பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கீர்த்தி நிறைந்த நாள்.
ரிஷபம்
ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிராக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். திறமை நிறைந்த நாள்.
மிதுனம்
பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சிரமம் நிறைந்த நாள்.
கடகம்
உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். நஷ்டம் நிறைந்த நாள்.
சிம்மம்
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்கால முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல் ஏற்படும். திடீர் அனுபவம் மூலம் மனதில் சில பக்குவம் உண்டாகும். கவலை நிறைந்த நாள்.
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வாடிக்கையாளர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.
துலாம்
தொழில் நிமித்தமான திட்டங்கள் கைகூடும். குழந்தைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும்.
விருச்சிகம்
வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களால் அனுபவம் உண்டாகும். பணி நிமித்தமாக இடமாற்றம் ஏற்படும். அனாவசிய செலவுகளை தவிர்க்க முயல்வீர்கள். எண்ணியது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் மேம்படும்.
தனுசு
பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனை விற்பனையில் லாபம் மேம்படும். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். .
மகரம்
உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் மறைமுக விமர்சனங்கள் உண்டாகும்.
கும்பம்
குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை படிப்படியாக குறைப்பீர்கள். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
மீனம்
புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் மேம்படும். வேகத்தை விட அமைதியை கடைபிடிக்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
டாபிக்ஸ்