Today's Rasi Palan (20.06.2023): எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் - இன்றைய ராசி பலன்கள்
Today's Rasi Palan (20.06.2023): 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்களை இங்கு ஒரே செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யக்கூடிய நாள். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். குறுகிய தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
ரிஷபம்:
மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும் நாளாக இருக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தனவரவுகள் மேன்மையை ஏற்படுத்தும். பழைய பிரச்னைகள் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். எதிர்காலம் சார்ந்த புதிய பாதைகள் புலப்படும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். இந்த நாள் நட்பு நிறைந்த நாளாக அமையும்.
மிதுனம்:
கணவன்- மனைவிக்கு இடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்படும். ஆனால், நண்பர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.
கடகம்:
விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் வேண்டும். கணவன்- மனைவி இருவருக்குமிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகலாம். வியாபார போட்டிகளை ஓரளவு சமாளிப்பீர்கள். ரகசியமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். வெற்றி கிடைக்கும் நாள்.
சிம்மம்:
பெற்றோர் வழியில் ஆதரவு ஏற்படும் நாள். கடன் சார்ந்த பிரச்னைகள் குறை வாய்ப்புள்ளது. மாறுபட்ட அணுகுமுறைகளால் எண்ணியவை ஈடேறும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் கைகூடும். எதிர்காலம் தொடர்பான குழப்பம் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். உழைப்பு மேம்படும் நாளாக இந்த நாள் அமையும்.
கன்னி:
நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வந்து சேருவார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு பிறக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
துலாம்:
கணவன் - மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபார பணிகளில் உள்ள நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும்.
விருச்சிகம்:
உத்தியோகஸ்தர்கள் பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் ஏற்படு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். குழந்தைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். புதிய நபர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
தனுசு:
வாழ்க்கைத் துணைவர் வழியில் அனுகூலம் ஏற்படும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்களுக்காக சென்று வருவீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தக பணிகளில் லாபம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஓய்வு வேண்டிய நாள்.
மகரம்:
மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வழக்குப் பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தனவரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். சோர்வுகள் உங்களை விட்டும் விலகும் நாள்.
மீனம்:
பயணங்களில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவினர்களின் வருகையால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வி சார்ந்த பயணங்கள் கைகூடும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.
டாபிக்ஸ்