துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.19 எந்த ராசிக்கு சூப்பரான நாள்?.. ராசிபலன் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.19 எந்த ராசிக்கு சூப்பரான நாள்?.. ராசிபலன் இதோ!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.19 எந்த ராசிக்கு சூப்பரான நாள்?.. ராசிபலன் இதோ!

Karthikeyan S HT Tamil
Dec 19, 2024 05:05 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 19 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.19 எந்த ராசிக்கு சூப்பரான நாள்?.. ராசிபலன் இதோ!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.19 எந்த ராசிக்கு சூப்பரான நாள்?.. ராசிபலன் இதோ!

துலாம்

துலாம் ராசி அன்பர்களே வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு செயல்பாடுகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். பணிகளில் ஒரு விதமான சோர்வு உண்டாகும். வியாபார செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை பகிர்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

மகரம்

மகர ராசி அன்பர்களே சூழ்நிலை அறிந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்ததன்மை குறையும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே மனதில் தோன்றிய எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.

மீனம்

மீன ராசி அன்பர்களே வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் வீட்டார் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner