மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil
Nov 19, 2024 05:39 AM IST

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு நவம்பர் 19 ஆம் தேதியான இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

அந்தவகையில், ஜோதிட கணிப்புகளின் படி, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசி உள்ளிட்ட 6 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே வெளியூர் பயண வாய்ப்புகளில் சில மாற்றம் உண்டாகும். சுபகாரிய முடிவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். இந்த நாள் ஏற்றம் இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். 

ரிஷபம்

ரிஷபம் ராசியினரே அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். தன வரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலை அமையும். பேச்சுக்களில் கலைநயம் வெளிப்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். 

மிதுனம்

சுபகாரியம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்களால் மாற்றம் ஏற்படும்.  ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

திடீர் பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனக்குழப்பங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். கடன் விஷயங்களில் விவேகம் வேண்டும். 

சிம்மம்

எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு ஏற்படும். கட்சிப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். வாகன வழியில் சில விரயங்கள் நேரிடலாம். பேச்சுக்களில் தன்னம்பிக்கை வெளிப்படும். 

கன்னி

உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வீடு புதுப்பிப்பது சார்ந்த சிந்தனை மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதைத் தவிர்க்கவும். திடீர் வரவுகள் உண்டாகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான புரிதல் உண்டாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner