Today Pooja Time : இன்று செப். 27 இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. வெள்ளிக்கிழமை பூஜையின் மகிமையும்.. நன்மையும் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time : இன்று செப். 27 இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. வெள்ளிக்கிழமை பூஜையின் மகிமையும்.. நன்மையும் இதோ!

Today Pooja Time : இன்று செப். 27 இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. வெள்ளிக்கிழமை பூஜையின் மகிமையும்.. நன்மையும் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Sep 27, 2024 06:12 AM IST

Today Pooja Time : வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நாளில், லட்சுமி தேவியை சடங்குகளுடன் வழிபடுகிறார்கள். லக்ஷ்மி தேவியை வழிபடுவதன் மூலம், வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளிலிருந்தும் விடுபட்டு, வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவார்.

Today Pooja Time : இன்று செப். 27 இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. வெள்ளிக்கிழமை பூஜையின் மகிமையும்.. நன்மையும் இதோ!
Today Pooja Time : இன்று செப். 27 இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. வெள்ளிக்கிழமை பூஜையின் மகிமையும்.. நன்மையும் இதோ! (அழகிய மணவாள தாசன் (facebook))

இது போன்ற போட்டோக்கள்

இன்றைய நாள் 27 செப்டம்பர் 2024

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

மாதம் : புரட்டாசி

தேதி: 11

கிழமை : வெள்ளிக்கிழமை

திதி : தசமி

நேரம் : பிற்பகல் 5 மணி 34 நிமிடம் வரை பின்பு ஏகாதசி

பிறை : தேய்பிறை

நட்சத்திரம் : இன்று பூசம் செப்டம்பர் 28 தேதி காலை 5 மணி 29 நிமிடம் வரை பின்பு ஆயில்யம்

சூரிய உதயம்

காலை : 6 மணி 03 நிமிடம்

நல்ல நேரம்

காலை : 9 மணி 15 நிமிடம் முதல் 10 மணி 15 நிமிடம் வரை

மாலை : 4 மணி 45 நிமிடம் முதல் 5 மணி 45 நிமிடம் வரை

நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்

ராகுகாலம் : பகல் 10 மணி 30 நிமிடம் முதல் நண்பகல் 12 மணி வரை

குளிகை : காலை 7 மணி 30 நிமிடம் முதல் 9 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் முதல் 4 மணி 30 நிமிடம் வரை

சந்திராஷ்டம் : கேட்டை

வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டியவை

வெள்ளிக்கிழமைகளில் சில காரியங்களை செய்வது மிகவும் நல்லது. அது உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்க உதவும். கல் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவற்றை வாங்கி வீட்டில் வைப்பது மிகவும் விஷேசம். இதனால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். இப்படி செய்வதால் ஏற்கனவே நீங்கள் வாங்கிய கடன் குறையும். வீட்டில் மென்மேலும் செல்வம் பெரும் என்பது நம்பிக்கை. வீட்டில் காலை மாலை இரண்டு நேரமும் விளக்கு ஏற்றி வழிபடுவதும் மிகவும் நல்லது.

வெள்ளிக்கிழமையில் செய்யக் கூடாதவை

வெள்ளிக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் முகச்சவரம் செய்வது நகம் வெட்டுவது போன்ற காரியங்களை தவிர்க்க வேண்டும். பூஜை பொருட்களை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்ந்து ஜோதிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்