Today Pooja Time : இன்று புரட்டாசி அமாவாசை.. புதன்கிழமை.. இன்றைய நல்ல நேரம்.. வழிபாட்டின் நன்மைகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time : இன்று புரட்டாசி அமாவாசை.. புதன்கிழமை.. இன்றைய நல்ல நேரம்.. வழிபாட்டின் நன்மைகள் இதோ!

Today Pooja Time : இன்று புரட்டாசி அமாவாசை.. புதன்கிழமை.. இன்றைய நல்ல நேரம்.. வழிபாட்டின் நன்மைகள் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 02, 2024 06:07 AM IST

Today Pooja Time : புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இந்நாளுக்கு உரிய சிறப்புகள் பற்றியும் இன்றைய நாளில் பூஜைக்கு உகந்த நேரம் பற்றியும் பார்ப்போம்.

Today Pooja Time : இன்று புரட்டாசி அமாவாசை.. புதன்கிழமை.. இன்றைய நல்ல நேரம்.. வழிபாட்டின் நன்மைகள் இதோ!
Today Pooja Time : இன்று புரட்டாசி அமாவாசை.. புதன்கிழமை.. இன்றைய நல்ல நேரம்.. வழிபாட்டின் நன்மைகள் இதோ!

இன்றைய நாள்

2 அக்டோபர் 2024.

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு: ஸ்ரீ குரோதி

மாதம் - புரட்டாசி

தேதி - 16

கிழமை - புதன்கிழமை

பிறை : தேய்பிறை

திதி : அமாவாசை அக்டோபர் 3ம் தேதி அதிகாலை 00.34 பின்பு பிரதமை

நட்க்ஷத்திரம்: உத்திரம் பிற்பகல் 1 மணி 44 நிமிடம் வரை பின்பு அஸ்தம்

நல்ல நேரம்:

காலை: 09.15 முதல் 10.15 வரை

மாலை: 04.45 முதல் 05.45 வரை

ராகு காலம்:

நண்பகல்: 12.00 முதல் 01.30 வரை

குளிகை: 

காலை: 10.30 முதல் நண்பகல் 12.00 வரை

எமகண்டம்:

காலை: 07.30 முதல் 09.00 வரை

சூரிய உதயம்:

காலை: 06.02

சந்திராஷ்டம நட்சத்திரம்: அவிட்டம்

இன்றைய சிறப்பு:

புதன் கிழமைகள் விநாயகப் பெருமானுக்கும், புதனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டவை. புதன்கிழமை விரதம் இருப்பது அறிவு, செல்வம் மற்றும் கிரக நல்வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. புதன் விரதத்தின் முறை, விதிகள் மற்றும் இந்த விரதத்தை எப்போது தொடங்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக புதன்கிழமை என்பது சாந்தி பூஜைகள் செய்வதற்கு மிகவும் உகந்த நாள். அதேபோல் அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள். நந்தவனம் அமைப்பதற்கு நல்ல நாள். புதன்கிழமையில் நீங்கள் வாங்கிய கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.

பொதுவாக புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று, புதன் பகவானுக்குரிய தானியமான பச்சை பயறு வாங்கி கொடுத்தால் பலம் அதிகரிக்கும். மேலும் புதன்கிழைமையில் மகாலட்சுமியை வழிபடுவதால் செல்வம், செழிப்பு பெருகும். குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக வழிபாடு செய்யலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்ந்து ஜோதிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் எப்போதும் இணைந்திருங்கள்

Whats_app_banner

டாபிக்ஸ்