தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tirupathi : திருப்பதி ஒருநாள் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க!

Tirupathi : திருப்பதி ஒருநாள் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
May 13, 2023 12:29 PM IST

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி
திருப்பதி

குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது கோடை விடுமுறையால் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் தொடங்கி 2023 ஜனவரி மாதம் வரை 10 மாதங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் ரூ. 1,275 கோடி 31 லட்சம், கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 2023ஆம் ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் ரூ. 123 கோடி 7 லட்சம் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது.

லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்னப்பிரசாதம் பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 42.64 லட்சம். தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 9.03 லட்சம் ஆகும். நேற்று முன்தினம் 67 ஆயிரத்து 853 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள கல்யாணக்கட்டாக்களில் 33 ஆயிரத்து 381 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

WhatsApp channel

டாபிக்ஸ்