தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிசயங்கள் செய்வார் சூரியன்.. ரிஷபத்தில் விளையாட்டு ஆரம்பம்.. காற்று வீசும் ராசிகள்

அதிசயங்கள் செய்வார் சூரியன்.. ரிஷபத்தில் விளையாட்டு ஆரம்பம்.. காற்று வீசும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2024 02:46 PM IST

Lord Sun: சூரியன் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் வைகாசி மாதம் பிறந்தது. தொடர்ந்து 30 நாட்கள் இந்த ராசியில் பயணம் செய்வார். அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது.

அதிசயங்கள் செய்வார் சூரியன்.. ரிஷபத்தில் விளையாட்டு ஆரம்பம்.. காற்று வீசும் ராசிகள்
அதிசயங்கள் செய்வார் சூரியன்.. ரிஷபத்தில் விளையாட்டு ஆரம்பம்.. காற்று வீசும் ராசிகள்

சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார் சூரிய பகவான். சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷ ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார்.

சூரியன் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் வைகாசி மாதம் பிறந்தது. தொடர்ந்து 30 நாட்கள் இந்த ராசியில் பயணம் செய்வார். அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் நிதி ரீதியான சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க கூடும். பணத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். பொழுதுபோக்குகளில் உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். சூரிய பகவான் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டு தீர்வுகளில் வெற்றி பெறுவார்கள். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு வேலைகள் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தவறான புரிதல்கள் இப்போது உங்களுக்கு சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel