Rahu Transit : ரொம்ப நாளா இந்த விஷயங்கள் நடக்காம இருந்ததா? இனி கவலை வேண்டாம்.. இந்த 3 ராசிக்கு எல்லாம் கிடைக்க போகுது!
ராகுவின் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது. அதன்படி அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி காணலாம்.
ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.
ராகு மற்றும் கேது மர்ம கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு மற்றும் கேது எப்போதும் பிற்போக்குத்தனமாக நகரும். தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலாம் ராசியில் இருக்கிறார்.
அக்டோபர் 30 ஆம் தேதி ராகு மற்றும் கேது தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள். அக்டோபர் 30-ம் தேதி மாலை ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசியில் பிரவேசிக்கிறார். எனவே அதே நேரத்தில் கேதுவும் துலாம் ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைவார்.
ராகுவின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ராகு பெயர்ச்சி ஆனவுடன் இந்த ராசிகளின் பிரச்சனைகள் குறையும். இவர்களுக்கு அனைத்து பணிகளிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி காணலாம்.
ரிஷப ராசி
ராகுவின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளும் இந்த நேரத்தில் வெற்றிகரமாக முடிவடையும்.
கன்னி ராசி
எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளையும் இந்த நேரத்தில் பெறக்கூடும்.
மகர ராசி
வருமான வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் இருக்கும். மொத்தத்தில் ராகுவின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களின் பிரச்சனைகளை குறைக்கும். வாழ்க்கையில் ராகுவின் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்