Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. ஆர்டர்களைப்பெற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. ஆர்டர்களைப்பெற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போகும் ராசிகள்

Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. ஆர்டர்களைப்பெற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Sep 15, 2024 09:18 PM IST

Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. ஆர்டர்களைப்பெற்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. ஆர்டர்களைப்பெற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போகும் ராசிகள்
Lord Sun: கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரியன்.. ஆர்டர்களைப்பெற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கப்போகும் ராசிகள்

சூரிய பகவான் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி, கன்னி ராசிக்கு பிற்பகல் 7:29 மணிக்குப் பெயர்ச்சியாகிறது. கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது, சூரியனின் பார்வை சனியின் மீது படுகிறது.

கன்னி ராசியில் மாறும் சூரிய பகவானின் சுப தாக்கத்தால், சனி சிலருக்கு நற்பலன்களைத் தருவார். சூரியனின் சஞ்சாரம் சனி பகவானைத் தழுவி இருப்பதால், அதிர்ஷ்டம்பெறும் ராசியினர் பற்றிப் பார்க்கலாம்.

சூரியனின் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்:

மிதுனம்:

கன்னி ராசியில் சூரியன் பெயர்வதால், சூரிய பகவான் சனியைப் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது. இதனால் மிதுன ராசியினருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மிதுன ராசியின் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் வெகுநாட்களாக முடிக்காத பணிகளை எல்லாம் மிதுன ராசியினர் படிப்படியாக முயன்று முடிப்பர். பல நாட்கள் மிதுன ராசியினர் என்றாலே விதாண்ட வாதம் பேசுபவர்கள் என்னும் நிலையில் இருந்து பலருக்கு, சாதகமான பேச்சினை பேசுவர். முன்னர்பெற்ற அனுபவத்தை வைத்து எந்த இடத்தில் நிதானமாகப் பேசவேண்டும், எந்த இடத்தில் அன்புடன் பேசவேண்டும் என்ற அறிவு, இக்காலத்தில் மிதுன ராசியினருக்கு வருகிறது. மேலும், உங்களின் பேச்சு பலரை ஈர்க்கும். சமூகத்தில் உங்களுக்கு இருந்த கெட்டப்பெயர் நீங்கி,மாண்பும் மரியாதையும் கூடும்.

கடகம்:

கன்னி ராசியில் சூரியன் பெயர்வதால், சூரிய பகவான் சனியைப் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது. இதனால் கடக ராசியினருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. கடக ராசியினர், இந்த காலத்தில் சரியாகத் திட்டமிட்டு பணியாற்றினால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெகுநாட்களாக வேறு இடங்களில் வேலைத்தேடி கிடைக்காத நபர்கள், இந்த நேரத்தில் வேலையைத் தேடினால், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கலாம். பணியிடத்தில் இருந்த மேல் அதிகாரிகளின் அதிகத்தலையீடு இக்காலத்தில் குறைந்து சுதந்திரமாகப் பணியாற்றுவீர்கள். வீட்டில் அப்பாவிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறைந்து, ஒற்றுமை பலப்படும். வெகுநாட்களாக உங்களை ஏமாற்ற நினைப்பவர்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.

மீனம்:

கன்னி ராசியில் சூரியன் பெயர்வதால், சூரிய பகவான் சனியைப் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது. இதனால் மீன ராசியினருக்கு எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கின்றன. மீன ராசியினருக்கு வெகுநாட்களாக கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். உயர் படிப்பு நல்ல கல்லூரியில் படிப்பீர்கள். பூர்வீக ஊரில் இருக்கும் சொத்தின்மூலம், ஒரு சிறு துரும்பாவது உங்கள் கைவசம் வந்து சேரும். போட்டித்தேர்வுகளுக்குப் படிப்பவர்களுக்கு மனப்பாட சக்தி அதிகரிக்கும். வெகுநாட்களாக வாங்க நினைத்து, கிடைக்காத பொருட்களை விரைவில் வாங்குவீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்