தமிழ் செய்திகள்  /  Astrology  /  The Day Jesus Christ Died Is Observed As Good Friday

சிலுவையில் இயேசு உயிரிழந்தார்.. புனித வெள்ளி துக்க நாள்.. விரதம் இருக்கும் கிறிஸ்தவர்கள்.. 3ஆம் நாள் உயிர்த்தெழுந்தார்!

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 04:43 PM IST

Bible: புனித வெள்ளி திருநாள் குறித்து தெரியாதவர்கள் இந்த திருநாளை ஒரு திருவிழா என நினைத்துக் கொள்வார்கள். அதிலும் இது மகிழ்ச்சியாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் திருநாள் என நினைப்பார்கள். ஆனால் இது துக்கம் அனுசரிக்கப்படும் நாளாக விளங்கி வருகிறது.

புனித வெள்ளி
புனித வெள்ளி

ட்ரெண்டிங் செய்திகள்

வசந்த உத்திராயணத்தின் முதல் முழு நிலவு நாள் முடிந்த பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு புனித வெள்ளி மார்ச் 29ஆம் தேதி அதாவது இன்று அனுசரிக்கப்படுகிறது.

புனித வெள்ளி திருநாள் குறித்து தெரியாதவர்கள் இந்த திருநாளை ஒரு திருவிழா என நினைத்துக் கொள்வார்கள். அதிலும் இது மகிழ்ச்சியாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் திருநாள் என நினைப்பார்கள். ஆனால் இது துக்கம் அனுசரிக்கப்படும் நாளாக விளங்கி வருகிறது.

இந்த புனித வெள்ளி திருநாளன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் பாவங்களை நீக்க வேண்டி இயேசு கிறிஸ்துவை நினைத்து வழிபாடு செய்வார்கள். உலக மக்களின் பாவங்களை நீக்குவதற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளாக இந்த புனித வெள்ளி கருதப்படுகிறது.

இயேசு கிறிஸ்து உலக பாவங்களை போக்குவதற்காக தனது உயிரையே போற்றிக் கொண்டார். இன்றிலிருந்து எந்த பாவங்களையும் செய்யக்கூடாது என்பதற்காக உறுதிமொழி எடுக்கும் நாளாக இந்த புனித வெள்ளி திருநாள் அனுசரிக்கப்படுகிறது.

புனித தேவாலயங்களில் இயேசு உயிர் பிரிந்த நாளாக அனுசரிக்கப்படும் இந்த புனித வெள்ளி திருநாளில் சிலுவை பாதை நடத்தப்பட்டு சிறப்பு திருப்பலிகள் மூலம் இயேசு கிறிஸ்துவுக்கு தொக்க பாடல்கள் பாடி இறப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த திருநாளில் தங்களையும் தங்கள் இருக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு இன்றைய நாள் முழுவதும் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து சுத்த போசதனத்தை கடைபிடிக்கின்றனர்.

வழக்கமாக தேவாலயங்களில் திருப்பலி நடத்தப்படும் பொழுது திவ்ய நற்கருணை வழங்கப்படுவது வழக்கம். அவர் இறப்பை அனுசரிக்கும் காரணத்தினால் புனித வெள்ளி திருநாளில் திவ்யா நற்கருணை துணியால் மூடி வைத்து அல்லது மறைத்து வைக்கப்படுகிறது. மூன்றாம் நாள் உயிர் நீத்த இயேசு பிரான் உயிர்த்தெழுவார். அந்த மூன்றாம் நாளில் இரவு நேரத்தில் திவ்ய நற்கருணை மீது வைக்கப்பட்ட துணி விலக்கப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசுவை நினைத்து ஈஸ்டர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டு இயேசு உயிரிழக்கிறார். மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று இயேசு பிரான் மீண்டும் உயிர்த்தெழுகிறார் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதைப் பின்பற்றியே இன்று வரை புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித வெள்ளி துக்க நாளாக அனுசரிக்கப்பட்டு ஈஸ்டர் திருநாள் வெகு விமர்சையாக கொண்டப்படுகிறது .

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel