ரிஷப ராசி 2025 புத்தாண்டு ராசிபலன் ராகு கேது உங்களுக்கு நல்லது செய்யப் போறாங்க.. 2025 வாழ்க்கை மாறப்போகுது..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரிஷப ராசி 2025 புத்தாண்டு ராசிபலன் ராகு கேது உங்களுக்கு நல்லது செய்யப் போறாங்க.. 2025 வாழ்க்கை மாறப்போகுது..!

ரிஷப ராசி 2025 புத்தாண்டு ராசிபலன் ராகு கேது உங்களுக்கு நல்லது செய்யப் போறாங்க.. 2025 வாழ்க்கை மாறப்போகுது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 04, 2024 05:43 PM IST

New Year 2025: சில ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சுபிட்சமான யோக பலன்களை பெறுகின்றன. அந்த ராசிக்காரர்களின் ஒருவர்தான் ரிஷப ராசிக்காரர்கள். இந்த 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கு காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி 2025 புத்தாண்டு ராசிபலன் ராகு கேது உங்களுக்கு நல்லது செய்யப் போறாங்க.. 2025 வாழ்க்கை மாறப்போகுது..!
ரிஷப ராசி 2025 புத்தாண்டு ராசிபலன் ராகு கேது உங்களுக்கு நல்லது செய்யப் போறாங்க.. 2025 வாழ்க்கை மாறப்போகுது..!

சில ராசிகளுக்கு தீமைகளும், சில ராசிகளுக்கும் நன்மைகளும் கிரக அமைப்புகளை பொறுத்து அமையும். அந்த வகையில் சில ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சுபிட்சமான யோக பலன்களை பெறுகின்றன. அந்த ராசிக்காரர்களின் ஒருவர்தான் ரிஷப ராசிக்காரர்கள். இந்த 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கு காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

ராகு கேது பெயர்ச்சி

உங்கள் ராசியில் ராகு பகவான் பத்தாவது இடத்திற்கு மாறுகிறார் இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும் நல்ல காலம் உங்களுக்கு பிறக்கின்றது ஒரு முறை கிடைக்காமல் போனால் மறுமுறை முயற்சி செய்தால் உங்களுக்கு இரட்டிப்பான பலன்கள் கிடைக்கக்கூடும் ராகு பகவான் இந்த முறை உங்களுக்கு மிகப்பெரிய நல்ல தாக்கத்தை கொடுப்பார். 

கேது பகவான் உங்கள் ராசியில் உச்சம் அடைகின்ற காரணத்தினால் திருமண வாழ்க்கையில் எந்த சிக்கல்களும் ஏற்படாது திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும் ராகு பகவானின் கர்ம ஸ்தான அமர்வானது உங்களுக்கு உறவினர்களால் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

உடல் ஆரோக்கியம்

கேது பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் இருக்கின்ற காரணத்தினால் வீடு மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை தேவை. வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ராகு பகவான் 12 வது இடத்திற்கு செல்கின்ற காரணத்தினால் உங்கள் பயணங்கள் அதிகமாக இருக்கும். அந்த பயணங்கள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை

உங்களுக்கு நடக்கவிருக்கும் அனைத்து சம்பவங்களும் நல்லவையாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மீது இருக்கின்ற மரியாதை அதிகரிக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தை நடைபெறும். இரு வீட்டார் சம்பந்தத்தோடு காதல் திருமணங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாயை மூடிக் கொண்டால் மிகப்பெரிய காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். 

வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்ற பாதை தொடங்கிவிட்டது. கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். நெருங்கிய உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நடக்கக்கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner