Sukra Peyarchi Palangal: துலாமில் ஆட்சியில் நிற்கும் சுக்கிரனால் உச்சம் தொடும் மகரம் ராசி!-sukra peyarchi palangal capricorn horoscope venus transit brings luck and opportunities in love career and finance - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Peyarchi Palangal: துலாமில் ஆட்சியில் நிற்கும் சுக்கிரனால் உச்சம் தொடும் மகரம் ராசி!

Sukra Peyarchi Palangal: துலாமில் ஆட்சியில் நிற்கும் சுக்கிரனால் உச்சம் தொடும் மகரம் ராசி!

Kathiravan V HT Tamil
Sep 28, 2024 05:00 PM IST

Sukra Peyarchi Palangal:மகரம் ராசியை பொறுத்தவரை ராசி அதிபதியாக சனி பகவான் உள்ளார். நீதி மற்றும் நேர்மையின் அடையாளமான சனி பகவான் ராசி அதிபதி என்பதால் நேர்மையான் சிந்தனையை மகரம் ராசிக்காரர்கள் கொண்டு இருப்பார்கள். பிறருக்கு உதவும் எண்ணம் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.

Sukra Peyarchi Palangal: துலாமில் ஆட்சியில் நிற்கும் சுக்கிரனால் உச்சம் தொடும் மகரம் ராசி!
Sukra Peyarchi Palangal: துலாமில் ஆட்சியில் நிற்கும் சுக்கிரனால் உச்சம் தொடும் மகரம் ராசி!

சுக்கிரன் தரும் நன்மைகள்  

களத்திர காரகன் என்று அழைக்கப்படும் சுக்கிர பகவான் திருமண வாழ்கையை தீர்மானிக்கும் கிரகம் ஆக உள்ளார். ஒருவருக்கு சுக்கிர பகவான் நன்றாக இருந்தால் மகிழ்ச்சிகரமான திருமண வாழ்கை அமையும். சுக்கிர பகவான் அருள் கிடைத்தால் வீடு, வாகனம், சொத்துக்களை வாங்கி ஜாதகர் மகிழ்ச்சியான வாழ்கையை வாழ்வார். நிம்மதியான வாழ்கையை கொடுக்கும் கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். 

மகரம் ராசியின் குணநலன்கள் 

மகரம் ராசியை பொறுத்தவரை ராசி அதிபதியாக சனி பகவான் உள்ளார். நீதி மற்றும் நேர்மையின் அடையாளமான சனி பகவான் ராசி அதிபதி என்பதால் நேர்மையான் சிந்தனையை மகரம் ராசிக்காரர்கள் கொண்டு இருப்பார்கள். பிறருக்கு உதவும் எண்ணம் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும். 

மகரம் ராசியும் சுக்கிர பகவானும்

விட்டுக்கொடுத்து வாழும் எண்ணம் கொண்ட மகரம் ராசிக்கார்களுக்கு மன கஷ்டம் உள்ளது. சிலருக்கு குடும்ப வாழ்கையில் பிரச்னைகள் உள்ளது. மகர ராசியில் இருந்து பத்தாம் இடத்தில் சுக்கிர பகவான் பெயர்ச்சி ஆகி ஆட்சி பெற்று உள்ளார். 5 மற்றும் 10ஆம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரன் ஆட்சி பெற்று உள்ளார். மேலும் மகரம் ராசி அதிபதியான சனி பகவானுக்கு சுக்கிரன் அதிநட்பு கிரகம் ஆகும். இதனால் மகரம் ராசிக்காரர்கள் சந்தித்து வந்த சங்கடங்கள் நீங்கும். தொழில் மற்றும் உத்யோக ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும்.

தொழில் ரீதியான முன்னேற்றம் 

தொழில் ரீதியாக பின்னடைவை சந்தித்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் லாபம் கிடைக்கும், நஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சியை தரும். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உடாகும்.  

தொழிலில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். புதிய வியூகங்கள் மூலம் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். கடனில் சென்று கொண்டிருந்த வியாபாரம் சீராக ஆனந்தம் தரும். 

வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உடன் இருந்த பிரச்னைகள் தீரும். உயரதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  

திருமணம் கைக்கூடும் 

ரிஷபம் ராசியில் இருந்து குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் பணவரவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகி ஆனந்தம் தரும். 

திருமண தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மறு திருமணத்திற்காக முயற்சி செய்பவர்களுக்கு திருமண முயற்சிகள் கைக்கூடும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner