Jains Impalement: இவ்வளவு கொடூரமா?.. சமணர்கள் கழுவேற்றம் பற்றி தெரியுமா?
Jains Impalement: பல்வேறு திருவிழாக்களின் ஒரு பகுதியாக இன்று வரை கழுவேற்றம் என்பது ‘பெருமிதத்துடன்’ நிகழ்த்தப்படுகிறது. அது பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு..!
ஆவுடையார் கோவிலில் உள்ள பிற்கால ஓவியம், கழுகுமலைக் கோயில் சுவரோவியங்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் குறித்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளின் போது அங்கே கழுவேற்ற வரலாறு பாடலாக ஓதப்படுகிறது. அதேபோல் திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழாவின் போதும் சைவ ஸ்தாபித வரலாறான கழுவேற்றம் ஓதப்படுகிறது. திருமங்கலம் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் நடைபெறும். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தேரேசுவரர் கோயில் சித்திரை திருவிழாவின் 6-ஆம் நாள் மண்டகப்படி அன்று கழுவேற்றம் நிகழ்வு இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவரைப் பிடித்து, நிர்வாணமாக்கி, அவரை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலைத் துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் இரவெல்லாம் கூப்பாடு போட்டு உயிரிழப்பார். கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். சமணர் கழுவேற்றப்பட்டது குறித்து பல்வேறு இலக்கியங்களில் சான்று பகிரப்படுகிறது.
மதுரையில் கூன்பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் சமணர்களை கழுவேற்றிய லீலை குறித்த ஓவியங்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் சுவர்களில் தீட்டி வைத்துள்ளனர்.
இலக்கியத் தரவுப்படி, சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறும்படியான பாண்டியனின் கட்டளையை ஏற்காத எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றம் செய்ததாக தெரிவிக்கிறது. அதாவது, சமணர்களுக்கும் - நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தருடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்று சைவ சமயத்தை தழுவ மறுத்த காரணத்திற்காக பாண்டிய மன்னனான கூன் பாண்டியன் 8000 சமணர்களை கழுவேற்றம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன.
பாண்டிய மன்னர் காலத்தில் மரண தண்டனை விதிக்கும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட இந்த கழுவேற்றம் நிகழ்வினை நினைவு கூறும் வகையில், பல்வேறு திருவிழாக்களின் ஒரு பகுதியாக இன்று வரை கழுவேற்றம் என்பது ‘பெருமிதத்துடன்’ நிகழ்த்தப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்