Simma Rasi : சிம்ம ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் என்ன? – வியக்க வைக்கும் பெண்கள்!
Simma Rasi : பாரம்பரியமாக ஜோதிடத்தை கடைப்பிடித்து வரும் மூத்த ஜோதிடர் சதீஷ் கொடுத்த தகவல்படி, சிம்ம ராசிக்காரர்கள் எந்த குணநலன்களை கொண்டு இருப்பார்கள், அவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்குவார்கள், அந்த ராசியைச் சேர்ந்த பெண்களின் ஆளுமை எப்படி இருக்கும் ஆகிய தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளார்.
பாரம்பரியமாக ஜோதிடத்தை கடைப்பிடித்து வரும் மூத்த ஜோதிடர் சதீஷ் கொடுத்த தகவல்படி, சிம்ம ராசிக்காரர்கள் எந்த குணநலன்களை கொண்டு இருப்பார்கள், அவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்குவார்கள், அந்த ராசியைச் சேர்ந்த பெண்களின் ஆளுமை எப்படி இருக்கும் ஆகிய தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளார்.
சிம்ம ராசிக்கான இன்றைய கணிப்பு - இந்த ராசியின் தினசரி ஜாதகப்படி, வேலைவாய்ப்புத் துறையில் மூத்த அதிகாரிகளுடன் இவர்களுக்கு வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால், வேலைவாய்ப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்கள் வணிகத் துறையில் இருந்தால், இன்றைய தினம் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களில் பலர் யாருடைய வார்த்தைகளையும் பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் அதனால் அரிய வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே மாணவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. அவர்கள் மேற்படிப்பை அங்கு தொடர வாய்ப்புள்ளது. எனவே அந்த வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது. எனவே மாணவர்கள் கவனமுடன் செயல்படவேண்டும்.
குடும்ப விவகாரங்கள் என்று வரும்போது, பல குடும்பங்களில் இல்லத்தரசிகளின் தைரியமே குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும். இந்த ராசியைச் சேர்ந்த இல்லத்தரசிகள் ஆளுமைமிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களின் பேச்சை வீட்டில் உள்ள அனைவரும் கேட்பார்கள். குடும்பத்தில் அன்பு, அமைதி நிறைந்திருக்கும். குடும்பத்தை வளர்ச்சிக்கான பாதையில் அழைத்துச்செல்பவர்களாக சிம்மராசிப்பெண்கள் இருப்பார்கள்.
சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக இருப்பார். மகம், பூரம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதமும் சிம்ம ராசியில் அடங்கும். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகள் ஆகும். இந்த ராசிக்காரர்கள் ராஜபோகத்துடனே இருக்க விரும்புவார்கள்.
தங்களின் முடிவை எளிதில் மாற்றாதவர்கள். இவர்களிடம் சொல், செயல், சிந்தனை அனைத்திலும் வேகம் இருக்கும். துரோகிகளையும், புறம் பேசுபவர்களையும் இவர்கள் அறவே வெறுப்பார்கள். சுயதொழில் இவர்களுக்கு சிறந்த தேர்வு. திறமையும், தைரியமும் நிறைந்தவர்கள். கூட்டத்திலேயே சிறந்தவர்களாக விளங்கக்கூடியவர்கள்.
டாபிக்ஸ்