மேஷத்தில் இணையும் சந்திரனும் குருவும்.. உருவாகும் புதுயோகத்தால் வெல்லும் ராசிகள்
மேஷத்தில் குருவும் சந்திரனும் இணைவதால் உண்டாகும் யோகத்தால் நன்மைபெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
2024ஆம் ஆண்டில் ஜனவரி 18 மற்றும் 19ஆகிய நாட்களில் மேஷ ராசியில் கஜகேசரி யோகம் வருகிறது. சந்திர பகவானும் குரு பகவானும் ஒரே ராசியில் இணையும்போது இந்த மங்களகரான நிகழ்வு நடக்கிறது. அப்படி மேஷ ராசியில் சந்திரனும் குரு பகவானும் இணைகின்றன. இதனால் வரும் ஜனவரி 18, 19 ஆகிய இருநாட்களிலும் சுப காரியங்களை செய்யலாம். இந்த கஜகேசரி யோகத்தால் 3 ராசிகள் மேன்மையடைகின்றன.
மேஷம்: குருவின் இந்த மாற்றத்தால் தொழில் செய்யும் மேஷ ராசியினருக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். இதனால் பொருளாதாரம் மேம்படும். பணியிடத்தில் பணிபுரியும் மேஷராசியினருக்கு அவரது திறமை வெளிப்பட்டு மேல் அதிகாரியிடம் நற்பெயர் கிட்டும்.
மிதுனம்: இந்த கஜகேசரி யோகத்தால் மிதுன ராசிக்கு சமூகத்தில் நற்பெயர் கிட்டும். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது உங்களது திறமை வெளிப்படும். தொழில் செய்பவர்களுக்குக் கணிசமான லாபம் கிடைக்கும். திருமணம் நடைபெறாத 90ஸ் கிட்ஸ்களுக்கு நல்ல வரன் அமையும்.
கடகம்: இந்த கஜகேசரி யோகத்தால் தொழிலில் உயர் அலுவலர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். புதிதாக வண்டி, வாகனம் வாங்கும் சூழல் உண்டாகும். இக்காலகட்டத்தில் குடும்பத்தில் வெகுநாட்களாக வாங்க நினைத்தவற்றை வாங்குவீர்கள். கணவன் -மனைவி இடையே மகிழ்ச்சி உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்