மகர ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை: வெல்லப்போகும் ராசிகள்!
மகர ராசியில் சதுர்கிரக ராசிகள் உண்டாகியிருப்பதால் சில ராசியினர் நன்மைபெறுகின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இயக்கத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அப்படி, மாற்றுகையில் சில ராசியினருக்கு நல்ல யோகத்தையும், பல ராசியினருக்கு கெட்ட யோகத்தையும் 12 ராசிகளில் உண்டாக்குகின்றன.
அதன்படி, மகர ராசியில் சதுர்கிரக யோகத்தால் சூரியன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு ராசிகளும் சேர்ந்து பயணிக்க இருக்கின்றனர். ஏற்கனவே, மகர ராசியில் சூரியன், புதன், செவ்வாய் பயணித்து வரும் நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி முதல் சுக்கிரன் நுழைவதால் இந்த மாற்றம் உண்டாகிறது. இதனால் சில ராசியினருக்கு செல்வ வளம் அதிகரிக்கப்போகிறது. அந்த நன்மை தரும் ராசிகள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம்: இந்த ராசியின் முதல் இடத்தில் சதுர் கிரகயோகம் உண்டாகிறது. ஆகையால், மகர ராசியினருக்கு உடல் நலம் மேம்படும். தைரியம் அதிகரிக்கும். விவேகம் கூடும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
துலாம்: இந்த ராசியின் 7ஆம் இடத்தில் இந்த சதுர் கிரக யோகம் உண்டாகிருப்பதால், இக்காலத்தில் ஜெயிக்கவேண்டும் என்ற வைராக்கியம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் பயன் கிட்டும். மனநிம்மதி தரும் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வருவாய் அதிகரிக்கும்.
கன்னி: இந்த ராசியின் 6ஆம் வீட்டில் இந்த சதுர்கிரக யோகம் உண்டாவதால், வியாபாரிகளுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். இதனால் கன்னிராசியினரின் பிள்ளைகள் படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வமாக மாறுவார்கள். வெகுநாட்களாக நீங்கள் கொடுத்து கைக்கு வந்துசேராத பணம், நம் கைக்கு வந்துசேரும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்