Shani Karma: சனி கர்மா கொண்ட நட்சத்திரங்களும்.. அவற்றின் சாதக பாதகமும்!
மூத்த சகோதரர்கள், மாமியார், சித்தப்பாவிடம் சனி கர்மா கொண்டவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
சில குடும்பங்களில் தீர்க்க ஆயுளோடு உயிரோடு இருப்பார்கள். 90 வயதுக்கு மேல் உயிரோடு இருப்பவர்கள் குடும்பத்தை நாம் பார்த்திருப்போம். அவர்கள் தான் அது. அதே குடும்பத்தில் அர்ப்ப ஆயுள் மரணங்கள் நடந்திருக்கும். பிறந்ததும் குழந்தை இறப்பது அல்லது 30 வயதிற்குள் இறப்புகள் ஏற்பட்டால் அது அர்ப்ப ஆயுள். மத்திம ஆயுள் என்றாலே 40 வயதை கடப்பது தான்.
சனி கர்மாவை கொண்ட நட்சத்திரங்கள் புனர்பூச நட்சத்திரம், அவிட்டம் நட்சத்திரம், ஸ்வாதி நட்சத்திரங்கள் ஆகியவை தான் சனி கர்மாவை கொண்டவை. இந்த 3 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்பத்தில் பார்த்தீர்கள் என்றால், தீர்க்க ஆயுள் கொண்டவர்களும் இருப்பார்கள், அர்ப்ப ஆயுள் கொண்டவர்களும் அதே குடும்ப கிளையில் இருப்பார்கள். இது ஒரு மரபணு தொடர்பு.
சனி கர்மா கொண்டவர்களுக்கு முதல் தீர்வு, இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் உதவி, உபகரண உதவிகள் செய்தால் பலன் கிடைக்கும். தினக்கூலி தொழிலாளர்களுக்கு முடிந்த உதவி செய்யலாம்.
இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், மகரம், மகர லக்கணம், கும்ப ராசி, கும்ப லக்கணக்காரர்கள் இவர்களுக்கு பயங்கர எதிரிகள். பூசம், அனுசம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவர்களுக்கு ஹீரோ மற்றும் வில்லனாக இருப்பார்கள்.
மூத்த சகோதரர்கள், மாமியார், சித்தப்பாவிடம் சனி கர்மா கொண்டவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்