September Viruchigam Rasipalan : விருச்சிக ராசியினரே செப்டம்பர் சொல்லும் சேதி என்ன? திருப்தியான வாழ்க்கை சாத்தியமா!-september viruchigam rasipalan scorpios what is the sethi of september is a satisfied life possible - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  September Viruchigam Rasipalan : விருச்சிக ராசியினரே செப்டம்பர் சொல்லும் சேதி என்ன? திருப்தியான வாழ்க்கை சாத்தியமா!

September Viruchigam Rasipalan : விருச்சிக ராசியினரே செப்டம்பர் சொல்லும் சேதி என்ன? திருப்தியான வாழ்க்கை சாத்தியமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 20, 2024 06:02 PM IST

September Viruchigam Rasipalan : சூரியன் 10ல் இருந்து 11ஆம் இடத்திற்கு மாறுவதால் இது உங்களுக்கு மிகவும் லாபகரமான மாதம். ஆனால் பணிச்சுமை அதிகரிக்கும். எப்போதும் பரபரப்பான சூழல் இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் சுப விரயம் இருக்கும்.

September Viruchigam Rasipalan: விருச்சிக ராசியினரே செப்டம்பர் சொல்லும் சேதி என்ன? திருப்தியான வாழ்க்கை சாத்தியமா!
September Viruchigam Rasipalan: விருச்சிக ராசியினரே செப்டம்பர் சொல்லும் சேதி என்ன? திருப்தியான வாழ்க்கை சாத்தியமா!

செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. எந்த ராசிக்கு அள்ளித்தரப் போகின்றன கிரகங்கள் என்கிற எதிர்பார்ப்பு, இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் பெரும்பான்மை ராசி என்று அறியப்படும் விருச்சிகராசிக்கு, செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது? 

விருச்சிகம் ராசிக்கு செப்டம்பர் எப்படி?

ராசிகளில் கடுமையான வலிமையான ராசி விருச்சிகம். குருவின் பார்வை, சனியின் வக்கிரகாலம் இரண்டும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் 15 நாட்கள் சூரியன் ஆட்சியில் பலமாக இருப்பதால் விருச்சிக ராசி, அல்லது லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரிய ஆதாயம் இருக்கும். உங்கள் ராசி நாதன் செவ்வாய் 8ல் இருப்பார். இதனால் செப்டம்பர் மாதம் முழுவதும் வேலை விஷயத்தில் சிறப்பாக இருக்கும்.

பொருளாதாரம்

சூரியன் 10ல் இருந்து 11ஆம் இடத்திற்கு மாறுவதால் இது உங்களுக்கு மிகவும் லாபகரமான மாதம். ஆனால் பணிச்சுமை அதிகரிக்கும். எப்போதும் பரபரப்பான சூழல் இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் சுப விரயம் இருக்கும். சுக்கிரன் ஆட்சியில் வருவதால் செப்டம்பர் 18ம் தேதிக்கு பிறகு வாகனம் வாங்க மிகவும் சரியான மாதம். ஆன்மீக சுற்றுலாவிற்கும் மிகவும் உகந்த நேரம்.

திருமணம் ராசிபலன் எப்படி

விருச்சிக ராசிக்காரர்கள் முதல் முறையாக திருமணத்திற்கு முயல்பவர்கள் இந்த குருவின் பார்வையை பயன்படுத்தி சரியான வரன்களை சேர்ந்தெடுப்பதற்கு இது சரியான நேரம். மறுமணத்திற்கு காத்திருக்கும் விருச்சிக ராசி, அல்லது லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் குருவின் பார்வையும், சுக்கிரனின் பலனும் கூட்டாக உதவி செய்யும். சுக்கிரன் கேதுவின் தொடர்பில் இருப்பதால் சின்னச்சின்ன சிக்கல்கள் இருக்கலாம்.

உற்சாகமாகும் உறவுகள்

கணவன் மனைவி இடையே காரசாரமான வாக்கு வாதங்கள் வரலாம். ஆனால் அந்த சண்டை சச்சரவுகள் நல்ல முடிவை தரும். உங்கள் சண்டைகளே மிகவும் நல்ல விஷயத்திற்காக தான் நடக்கும். ஏற்கனவே உறவில் இருப்பவர்கள் திருமண வாழ்க்கையை அமைக்க முயற்சிப்பார்கள்

மாணவர்களே ஜாலிதான்

மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் அருமையாக இருக்கும். இந்த செப்டம்பரில் சூரியன் புதனுடன் சேர்ந்து வருவதால் எதிர்காலம் குறித்த முயற்சிகள் மிகவும் சிறப்பாக அமைவதற்கான சரியான மாதம். பொருளாதார ரீதியாகவும் விருச்சிக ராசி மாணவர்களுக்கு மிகவும் நன்றாகவே இருக்கும்.

பெண்களே உஷார்

செப்டம்பர் மாதம் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் எதுவும் வராது. சுக்கிரன் நீச்சமடைந்து கேதுவுடன் 12ம் இடத்திற்கு மாறுவார். 8ல் செவ்வாய் இருப்பதால் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படலாம். மனதளவில் உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் பூரணமடைய வாய்ப்பு இல்லை. மற்றபடி உங்கள் மனதையும் சூழலையும் பக்குவமாக பார்த்து கொள்வது நல்லது.

ஆரோக்கியம்

விருச்சிக ராசிக்காரர்களின் ராசி நாதன் செவ்வாய் மிதுன வீட்டில் இருப்பார். இதனால் ஏற்கனவே உங்கள் உடலில் இருக்கும் உபாதைகளுக்கு சரியான மருத்துவம் பார்ப்பது நல்லது. உடல் உபாதைகள் தீரும்.

மூத்த குடி மக்களை பொறுத்த வரை நல்ல பலன்கள் கிடைக்கும். 8ல் செவ்வாயும் 7ல் குருவும் இருப்பதால் பாக பிரிவினைக்கு இது மிகவும் சரியான மாதம். புதிய வீடு கட்டுவதற்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.