Sani Peyarchi: சுகமான சுமையாக மாறும் ஏழரை சனி.. விரைய சனியால் பெரிய பாதிப்பில்லை.. யார் விஷயத்திலும் மூக்க நுழைக்காதீங்க-sani peyarchi seven and a half saturn becomes a pleasant burden fast saturn will not cause much harm - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi: சுகமான சுமையாக மாறும் ஏழரை சனி.. விரைய சனியால் பெரிய பாதிப்பில்லை.. யார் விஷயத்திலும் மூக்க நுழைக்காதீங்க

Sani Peyarchi: சுகமான சுமையாக மாறும் ஏழரை சனி.. விரைய சனியால் பெரிய பாதிப்பில்லை.. யார் விஷயத்திலும் மூக்க நுழைக்காதீங்க

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 26, 2024 05:00 AM IST

Sani Peyarchi : சனி பகவான் 2025 மார்ச் 29 ஆம் தேதிக்கு பிறகு விரய ஸ்தானத்திற்கு சென்று விரைய சனியாக அமரப்போகிறார். அதாவது உங்களுக்கு ஏழரை சனி தொடங்கப்போகிறது. இப்பொழுது கூட நீங்கள் ஏற்கனவே ஏழரை சனியின் கையில் மாட்டின மாதிரிதான் இருக்கும். இதில் புதுசா என்ன ஏழரை சனி என நினைக்கிறீர்களா.

Sani Peyarchi: சுகமான சுமையாக மாறும் ஏழரை சனி.. விரைய சனியால் பெரிய பாதிப்பில்லை.. யார் விஷயத்திலும் மூக்க நுழைக்காதீங்க
Sani Peyarchi: சுகமான சுமையாக மாறும் ஏழரை சனி.. விரைய சனியால் பெரிய பாதிப்பில்லை.. யார் விஷயத்திலும் மூக்க நுழைக்காதீங்க

கவலை வேண்டாம்

சனி லாபஸ்தானியாக லாபத்தில் இருந்தாலும் சேமிக்க முடியாத நிலையில் தான் சனி பகவான் இருந்திருப்பார். இந்த காலகட்டத்தில் வரவுக்கு மீறி செலவும் இருந்திருக்கும். மேஷ ராசி நேயர்களே கவலை வேண்டாம் ஏழரை சனி காலத்தில் நன்மை நடக்கப்போகிறது கவலைப்படாதீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி குடும்ப நிலை சிறப்பாக உயரப்போகிறது. திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற அமைப்பு சிறப்பாக அமையப்போகிறது. நீண்ட நாட்களாக இருந்த திருமணத்தடை முற்றிலும் நீங்கி திருமண பந்தம் உண்டாகப் போகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் சொந்த வீடு அமைப்பு சிறப்பாக அமையப்போகிறது குருவின் வீட்டில் சனி இருப்பதால் நிறைய நன்மைகளை உண்டாக்கப் போகிறது.

சொந்த வீடு வாங்கும் அமைப்பு இருக்கு.

எப்படியாவது கடனை உடனே வாங்கியாவது சொந்த வீட்டை அமைப்பை உருவாக்கிக் கொடுக்கப் போகிறார் சனி பகவான். மேலும் 12 ஆம் வீட்டிற்கு சனி வருவதால் தொழில் விரயம் ஏற்படும். விரைய சனி காலகட்டத்தில் விரயம் கண்டிப்பாக இருக்கும். எனவே ஏதாவது ஒரு வழியில் கடனை உருவாக்கிக் கொள்வது நல்லது. கடன் வாங்கி வண்டி வாங்குவது, கடன் வாங்கி வீடு கட்டுவது, கடன் வாங்கி தொழில் தொடங்குவது, என ஏதாவது ஒரு வழியில் கடனை உருவாக்கிக் கொள்வது நல்லது. குறிப்பாக உங்களுக்கு இந்த காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய செலவுகளை சுபவிரய செலவாக மாற்றிக் கொள்வது புத்திசாலி தனம் என்று சொல்லலாம். நல்லது இல்லாவிட்டால் அபவிரய செலவு உண்டாகும். குறிப்பாக மருத்துவ செலவுகள் என தேவையில்லாத செலவுகள் இந்த காலகட்டத்தில் ஏற்படும். எனவே ஏதேனும் ஒரு வழியில் கடனாக இருப்பது இந்த காலகட்டத்தில் நல்லது.

இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் மன உளைச்சல்கள் இருக்கத்தான் செய்யும். தொழில் வேலை குடும்பம் என ஏதாவது ஒரு வழியில் மன உளைச்சல்கள் இருக்கும். இருப்பினும் சனி எதையும் உங்களிடமிருந்து எடுத்துச் செல்ல மாட்டார். சனி எப்பொழுதும் எதையாவது ஒன்றை உருவாக்கிக் கொடுத்துவிட்டுதான் செல்வார். கவலை வேண்டாம். சனி கொடுப்பதை எவர் தடுப்பார் என்பார்கள். என்ன கொடுக்கும் பொழுது அதற்கான கஷ்டத்தையும் சேர்த்துக் கொடுப்பார். அப்பதான் அந்த கொடுப்பினையின் அருமை புரியும். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க்கைன்னா என்ன வாழ்க்கையின் படிப்பினைகளை கற்றுக் கொடுத்துவிட்டு தான் சனி பகவான் செல்வார். இந்த காலகட்டத்தில் சொந்த தொழில் அமைப்பு சிறப்பாகவே இருக்கப்போகிறது.

பலகாலமாக தொழிலாளியாக இருந்த நீங்கள் ஏதாவது ஒரு வழியில் முதலாளி ஆவீர்கள். தொடங்கும் தொழிலில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் மனநிம்மதியையும் மனநிறைவையும் சனி கண்டிப்பாக கொடுப்பார். மேலும் மேஷ ராசி இந்த காலகட்டத்தில் உடல்நலத்தின் மீது மட்டும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. அதேபோல இன்னும் ஒரு ஏழரை வருடத்திற்கு யார் விஷயத்திலும் மூக்கை நுழைக்க வேண்டாம். இந்த காலகட்டத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்தோ, வாக்கு கொடுப்பது போன்ற விஷயத்தில் ஈடுபட வேண்டாம். அதுதான் உங்களுக்கு நல்லது.

கடந்த இரண்டரை வருடமாக லாப சனியாக இருந்தாலும் சனியின் பார்வை உங்கள் மீது நேரடியாக விழுந்தது. ஆனால் வரும் ஏழரை சனியின் சனியின் வக்கிர பார்வை முழுவதுமாக விலகப் போகிறது. இந்த விரைய சனியும் உங்களுக்கு பெரிய பாதிப்பை தராது. கவலை கொள்ள வேண்டாம். எனவே அடுத்த இரண்டரை வருடம் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும் சகல சௌபாக்கியமும் கிடைக்கப் போகிற ஆண்டுகளாகவே அமையப்போகிறது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்த ஏழரை சனி உங்களுக்கு சுகமான சுமையாக அமையப்போகிறது. இருந்தாலும் அதற்கான சுகங்களையும் சனி பகவான் உங்களுக்கு கொடுத்துவிட்டுதான் செல்வார். மொத்தத்தில் இந்த ஏழரை சனி உங்களுக்கு சிறப்பானதாகவே இருக்க போகிறது கவலை வேண்டாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்