தமிழ் செய்திகள்  /  Astrology  /  Rasis Favoured By The Combination Of Rahu And Mercury Or Budhan

Rahu and Budhan Combo: ராகு - புதன் சேர்க்கையால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 10, 2024 02:32 PM IST

Rahu Budhan: ராகு மற்றும் புதன் சேர்க்கையால் நன்மைகளை கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

ராகு மற்றும் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
ராகு மற்றும் புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு சூழ்ச்சி கிரகம் ராகுவுடன் புதன் இணைவதால் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகிறார்கள். ராகு மற்றும் புதன் சேர்க்கை 12 ராசிகளையும் பாதிக்கும். இது சிலருக்கு நன்மையாகவும், சிலருக்கு தீமையாகவும் இருக்கும். எந்த ராசிக்கு இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை நன்மை பயக்கும் என்பதைக் கணித்தோம். அதன் அடிப்படையில், 4 ராசிக்காரர்கள் பெருமளவு பயனடைவார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

கடகம்: மீன ராசியில் புதன் மற்றும் ராகு சேர்க்கையால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மைக்குப் பஞ்சமில்லை. நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும், இதன் காரணமாக நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிட்டும். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவாக இருக்கும், திருமணமானவர்களின் வாழ்க்கையில் இனிமை இருக்கும். தொழிலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.மாணவர்கள் உயர்கல்வி துறையில், வெளிநாட்டு கல்லூரிகளில் சேர்க்கைக்கான வாய்ப்பு பெறலாம். தொழில் வியாபாரத்தில் சாதகமாக இருக்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்: புதன் மற்றும் ராகு சேர்க்கையால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள், தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும், இதனால் பொருளாதார நிலை மேம்படும். குடும்ப உறவுகள் பலமாக இருக்கும். குடும்பத்தினருடன் பயணம் செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், வெளிப்புற உணவைத் தவிர்க்கவும். குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் இலக்குகளை அடைய இந்த நேரம் சிறந்தது. பணியில் மூத்தவர்களின் உதவி கிடைக்கும். மரியாதை நிலைநாட்டப்படும். நீங்கள் ஒரு திட்டத்தை நினைத்தால், அது நிறைவேறும்.

மகரம்: மீன ராசியில் ராகு மற்றும் புதனின் சேர்க்கையால், மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமாக செயல்கள் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள், புதிய ஒப்பந்தத்தைப் பெறலாம். ஆனால் முதலீடு செய்வதற்கு முன் கலந்துரையாடுங்கள். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். உங்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு மருத்துவரை அணுகவும்.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் அருள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் பணி பாராட்டப்படும். அதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு இது நல்ல நேரம். திருமண வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் குறையும். முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம். நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம்.

சிம்மம்: ராகு மற்றும் புதனின் சேர்க்கை காரணமாக உங்களின் வருமான ஆதாயங்கள் பெருகும். நிதிநிலை மேம்படும். கடன் பிரச்னைகள் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதக பலன்கள், பதவி உயர்வு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்