சனி பெயர்ச்சியால் அபூர்வ பலன், அசுர வளர்ச்சி நிச்சயம்.. பண மழை கொட்டும், உங்க ராசி இருக்கா பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி பெயர்ச்சியால் அபூர்வ பலன், அசுர வளர்ச்சி நிச்சயம்.. பண மழை கொட்டும், உங்க ராசி இருக்கா பாருங்க!

சனி பெயர்ச்சியால் அபூர்வ பலன், அசுர வளர்ச்சி நிச்சயம்.. பண மழை கொட்டும், உங்க ராசி இருக்கா பாருங்க!

Manigandan K T HT Tamil
Published Oct 09, 2024 04:07 PM IST

ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னக்காரர்கள் சனியால் கோடீஸ்வரர் யோகம் பெறும். ராசியில் முதன்மையாக இருக்க போவது ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னக்காரர்கள் தான். ரிஷபத்திற்கு லாப ஸ்தானத்தில் சனி செல்கிறார். லாப ஸ்தானத்தில் ஏதாவது ஒரு கிரகம் வந்தால் நல்லது.

சனி பெயர்ச்சியால் அபூர்வ பலன், அசுர வளர்ச்சி நிச்சயம்.. பண மழை கொட்டும், உங்க ராசி இருக்கா பாருங்க!
சனி பெயர்ச்சியால் அபூர்வ பலன், அசுர வளர்ச்சி நிச்சயம்.. பண மழை கொட்டும், உங்க ராசி இருக்கா பாருங்க!

இது போன்ற போட்டோக்கள்

சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தையும் கோடீஸ்வர யோகத்தையும் அள்ளித் தரப் போகிறார்.

ரிஷப ராசி

ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னக்காரர்கள் சனியால் கோடீஸ்வரர் யோகம் பெறும். ராசியில் முதன்மையாக இருக்க போவது ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னக்காரர்கள் தான். ரிஷபத்திற்கு லாப ஸ்தானத்தில் சனி செல்கிறார். லாப ஸ்தானத்தில் ஏதாவது ஒரு கிரகம் வந்தால் நல்லது. அதில் சனி வருவது மிகவும் சிறப்பான பலன்களை பெற்றுத் தரப்போகிறது.

லாப ஸ்தானத்தில் வருட கிரகமான சனி இரண்டு வருடம் அமரப் போகிறார். எனவே அடுத்த இரண்டு வருடத்திற்கு ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னம் இரண்டில் ஏதாவது ஒன்றில் பிறந்திருந்தால் உங்களுக்கு லாபத்திற்கு குறைவு இருக்க போவதில்லை. சனி சாதாரண கிரகம் கிடையாது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இதுவரை வராத கடன்களையும் இனி திரும்ப வர வைக்க போகிறார். எனவே இதுவரை வருமா வராதா என இருந்த கடன்கள் நிச்சயம் வந்து சேர போகிறது.

தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த லாபம் இனி 10 மடங்கு உயர்ந்து பணமழை கொட்டப் போகிறது. பெரிய வளர்ச்சியும் அசுர வளர்ச்சியும் உங்களது வாழ்க்கையில் சனிபகவான் ஏற்படுத்தி தரப் போகிறார். அதைப் போல வேலைக்கு செல்போர்களுக்கும் நல்ல பிரமோஷன் சம்பளம் உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்பு சிறப்பாக இருக்கப்போகிறது.

அடுத்த இரண்டரை வருடத்திற்கு..

அடுத்த இரண்டை வருடத்திற்கு ரிஷப ராசிக்காரர்கள் எதிர்பார்த்த அனைத்துமே நடக்கப் போகிறது. ரிஷப ராசிக்கு 11ஆம் இடத்தில் சனிபகவான் வரப்போகிறார். இதனால் அற்புதமான ராஜயோக பலன்களையும் நீங்கள் அனுபவிக்க போகிறீர்கள். குறிப்பாக நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்சனைகளும் திருமண தடை போன்றவை எல்லா விஷயங்களுமே முழுக்க முழுக்க சரியாக போகிறது.

11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருவதால் முழுக்க முழுக்க நன்மையை பெறப்போகிறீர்கள். பொருளாதாரம், குடும்பம், மன நிம்மதி எனும் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களுமே கிடைக்கப் போகிற காலகட்டமாக இந்த காலகட்டம் உங்களுக்கு அமையப் போகிறது. ரிஷப ராசி அன்பர்களுக்கு இனி வரும் காலகட்டம் சிறப்பான காலகட்டமாக பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கப் போகிற காலகட்டமாக அமையப் போகிறது.

அடுத்ததாக கோடீஸ்வர யோகம் மிதுன ராசி மற்றும் மிதுன லக்னக்காரர்களுக்கு தான். மிதுனத்திற்கு சனி பகவான் தர்மஸ்தானமான அதாவது தொழிற் ஸ்தானத்திற்கு சனி பகவான் வரப்போகிறார். தொழிற் ஸ்தானத்தில் ஒரு பாவியாவது வருவது சிறப்பு. அதில் இப்பொழுது சனி பகவன் வருவது மிக மிக சிறப்பான பலன்களை பெற்று தரப்போகிறது. தோஷ ஸ்தானத்தில் தீய கிரகம் இருந்தால் முன்னேற்றம் நிச்சயம் இருக்கும் என்பது ஜோதிட விதி. எனவே மிதுன ராசி அல்லது மிதுன லக்னக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை வருடத்திற்கு எந்த முயற்சி எடுத்தாலும் அதில் 100% வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சனி உழைப்பாளி கிரகம், எனவே உழைப்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்க தயங்கமாட்டார். எனவே நீங்கள் இந்த காலகட்டத்தில் உழைப்பதற்கு மட்டும் தயாராக இருந்தால் போதும், இந்த காலகட்டத்தில் கடின உழைப்பு அதிகமாக இருக்கும், அதற்கான பலன்களையும் சனி பகவான் அள்ளிக் கொடுப்பார்.

நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும் சரி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி அடுத்த இரண்டு வருடத்திற்கு சனி பகவான் அபூர்வமான வளர்ச்சியை உங்களுக்கு தர போகிறார். கடினமாக உழைக்க மட்டும் தயாராகுங்கள், பத்தாம் பாவத்தில் சனி வருவதால் வருமானத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் தடை இருக்காது. இது நாள் வரை உங்களுக்கு இருந்த கடன்களும் அடையப் போகிறது. பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கப் போகிறது. மொத்தத்தில் மிதுன ராசி அல்லது மிதுன லக்னக்காரர்களுக்கு வாழ்க்கை பலமாக போகிறது அடுத்ததாக கோடீஸ்வரர் யோகம் பெரும் ராசி யார் என்றால் கடக ராசி மற்றும் கடக லகாரர்கள் தான்.

கடகத்திற்கு ஏன் கோடீஸ்வர யோகம் என்றால் பாக்ய ஸ்தானத்தில் சனி பகவான் செல்ல போகிறார். பாக்ய ஸ்தானத்திற்கு அடுத்த இரண்டு வருடத்திற்கு சனிபகவான் அமரபோவதால் உங்களது வாழ்க்கையில் எல்லாவிதமான பாக்கியங்களையும் பெறப்போகிறீர்கள்.

அது என்ன பாக்ய ஸ்தானம் என்றால் நாம் முன் ஜென்மத்தில் செய்த நல்ல விஷயத்திற்கான பலன்களை பெரும் அமைப்பாகவே பாக்ய ஸ்தானம் கருதப்படுகிறது.

எனவே அடுத்த இரண்டு வருடம் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த நல்ல விஷயத்திற்கான பலன்களை 100% பெற போகிறீர்கள். கடக ராசிக்காரர்கள் அல்லது கடக லக்கினார்கள் ஏதாவது முயற்சி செய்தால் போதும். அதில் 100% வெற்றியும் திடீர் அதிஷ்டமும் உண்டாகும். கடக ராசிக்கு மார்ச் 29-க்கு பிறகு நல்ல காலம் தான். கடந்த இரண்டு வருடமாக வாழ்க்கையில் எல்லா விஷயத்தையுமே தடைகளும் தாமதங்களும் கஷ்டங்களும் துன்பங்களும் என சனி பகவான் உங்களை பாடாய் படித்து விட்டார். வரும் பெயற்சியில் எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு செல்வதால் அஷ்டம சனி முடிய போகிறது. எனவே இனி எல்லா விஷயத்திலும் நல்ல பலன்களை அடையப்போகிறீர்கள்.

மேலும் பொருளாதார தடைகளும் நீங்கி உங்களது வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே அமையப்போகிறது.