’ராகுவால் பண மழை! கேதுவால் அருள் மழை!’ மேஷம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’ராகுவால் பண மழை! கேதுவால் அருள் மழை!’ மேஷம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

’ராகுவால் பண மழை! கேதுவால் அருள் மழை!’ மேஷம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Nov 15, 2024 08:52 PM IST

ராகு பெயர்ச்சி பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வகையில் இருக்கும். இதுவரை இருந்து வந்த பணம் சார்ந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். கடன் சார்ந்த பிரச்னைகள் மற்றும் வம்பு, வழக்குகள் ஆகியவை தீரும்.

’ராகுவால் பண மழை! கேதுவால் அருள் மழை!’ மேஷம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!
’ராகுவால் பண மழை! கேதுவால் அருள் மழை!’ மேஷம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

மேஷமும் ராகுவும்!

மேஷம் ராசியை பொறுத்தவரை இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும் காலம் வருகிறது. சனி பெயர்ச்சி மூலம் விரைய சனி பாதிப்பை மேஷம் ராசிக்காரர்கள் சந்திக்கும் நிலை இருந்தாலும், விபரீத ராஜயோகம் உருவாதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ராகு பெயர்ச்சி பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வகையில் இருக்கும். இதுவரை இருந்து வந்த பணம் சார்ந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். கடன் சார்ந்த பிரச்னைகள் மற்றும் வம்பு, வழக்குகள் ஆகியவை தீரும். 

வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் புதிய வீடுகள் கட்டுவது குறித்து திட்டமிடுவீர்கள். தொடர் பணவரவால் தொல்லைகள் தீரும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆதாயம் கிடைக்கும். உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் ஏற்றத்தை கொடுக்கும். வேலை சார்ந்த விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உள்ளூர் அளவில் தொழில் செய்து கொண்டு இருந்தவர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு தொழிலை விரிவு செய்வீர்கள், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் மூலம் ஆதாயம் கிட்டும். பங்குச்சந்தை வணிகத்தில் செய்த முதலீடுகள் பலன் தரும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இறை உணர்வால் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். 

மேஷமும் கேதுவும் 

ராசிக்கு 6ஆம் இடமான கன்னி ராசியில் இருந்த கேது பகவான் 5ஆம் இடமான சிம்மம் ராசியில் அமர உள்ளார். கேது பகவானால் லட்சுமி கடாட்சமும், குலதெய்வ அருளும் உண்டாகும். சனி பகவானால் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். அறிவுசார்ந்த விவாகரங்களில் இருந்த சிக்கல்கள் தீரும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அரசு வழியில் இருந்து ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். பிள்ளைகள் சார்ந்த விவகாரங்களில் இருந்த சங்கடங்கள் தீரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் முடிவுக்கு வரும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner