’மீன ராசிக்கு 2025 ஜனவரி முதல் 6 மாதங்களுக்கு செம அடி உறுதி!' ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025!
மீனம் ராசிக்காரர்களுக்கு மாற்றம் தரும் பெயர்ச்சியாக ராகு கேது பெயர்ச்சி இருக்க போகின்றது. ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்படுவது சாலச் சிறந்ததாக இருக்கும். பொறுமையோடும், நிதானத்தோடும் செயல் திட்டங்களை வகுத்தால் எந்த பிரச்னைகளில் இருந்து வெளியே வரலாம்.
18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.
ஜூன் மாதம் வரை பொறுமை
இறை வழிபாடு பிரச்னைகளில் இருந்து வெளிவர வழி செய்யும். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பணியிடங்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். ஜூன் மாதத்திற்கு பிறகு அரசியல் மற்றும் அரசாங்கத் தொடர்புகள் உண்டாகும். இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. போதை வஸ்து, பெண் மோகத்தால் பெரும் பிரச்னைகள் உண்டாகலாம். ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும் பழகும் போது கவனம் தேவை.
நேர்மறை சிந்தனை அவசியம்
எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை எண்ணத்துடன் செயல்படவும். 6ஆம் இடத்தில் உள்ள கேது பகவானால் வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரம், வேலை, கல்விக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லம் யோகம் உண்டாகும். வேலையில் இடமாற்றம் மூலம் பலன்கள் கிடைக்கும். தொழில்களை விரிவு செய்து ஆதாயம் பெறுவீர்கள்.
வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வம்பு, வழக்குகள் உண்டாகலாம் என்பதால் பேச்சில் கவனம் தேவை. உடல்நல பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.
வேலை வாய்ப்பு
ராணுவம், காவல்துறையில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பணி சார்ந்து வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உண்டாகும். குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சி கூடும். கும்பகோணம் அருகே உள்ள திரும்பாபூரில் உள்ள சிவபெருமானை வழிபடுவது ராகு கேதுவால் உண்டாகும் துன்பங்கள் விலகி நன்மைகள் நடைபெறும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்