Pooja Room Tips: ’உங்கள் வீட்டில் இந்த படங்கள் இருந்தால் ஆபத்து!’ பூஜை அறையில் வைக்க கூடாத சுவாமி படங்கள் இதோ!
Pooja Room Tips: கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது சிறப்புகளை தரும். மேற்கு திசை மற்றும் வடக்கு திசை நோக்கியும் படங்களை வைத்து வழிபடலாம். தட்சிணாமூர்த்தி, நடராஜர் போன்ற தெய்வங்களை மட்டும் தெற்கு திசையில் வைத்து வழிபாடு செய்யலாம்.

பொதுவாக நாம் வீடு கட்டும் போதே கடவுளுக்காக என்று தனி இடம் ஒதுக்கி பூஜை அறையை கட்ட வேண்டும். அப்படி கட்ட இயலாதவர்கள் தனியாக மரத்தில் செய்யப்படும் கதவு உடன் கூடிய பூஜை அறையை பயன்படுத்தலாம். எவ்வளவு பழமையான படங்களாக இருந்தாலும் அது உடைந்து இருந்தால் அதனை உடைந்த நிலையில் வழிபாடு செய்யக் கூடாது. அதனை சரி செய்து பூஜை செய்வது உத்தமம். சிதிலம் அடைந்து உள்ள விக்கிரகங்களை நீர்நிலைகளை சேர்ப்பது நமது மரபு ஆகும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
கடவுள் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது சிறப்புகளை தரும். மேற்கு திசை மற்றும் வடக்கு திசை நோக்கியும் படங்களை வைத்து வழிபடலாம். தட்சிணாமூர்த்தி, நடராஜர் போன்ற தெய்வங்களை மட்டும் தெற்கு திசையில் வைத்து வழிபாடு செய்யலாம்.
பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள்?
- விநாயகர், சரஸ்வதி, மகாலட்சுமி, முருகன், திருமால் ஆகிய 5 தெய்வங்களும் இருக்க கூடிய படம் வீடுகளில் கட்டாயம் இருக்க வேண்டியது அவசியம். ஒரு வீட்டுக்கு தேவையான எல்லா நலன்களையும் இதில் உள்ள தெய்வங்களே தந்து விடுவார்கள்.
- விநாயகர் ஆனவர் வினைகளை நீக்கி எல்லா நன்மைகளையும் வாரி வழங்கும் வள்ளல் ஆக உள்ளார்.
- சரஸ்வதி தேவி ஆனவர் அறிவு, ஞானம், புத்தி, வித்தைகள், படிப்பினைகளை தரும் தெய்வமாக உள்ளார்.
- மகாலட்சுமி தாயார் ஆனவர் குடும்பத்திற்கு தேவையான அனைத்து வகையான செல்வ நலன்களை தரக்கூடிய தெய்வம் ஆவார்.
- திருப்பதி பெருமாள் ஆனவர் குடும்ப ஒற்றுமையை அருளக்கூடியவர்.
- முருகப்பெருமான் ஆனவர் பிரச்னைகளை தீர்த்து, எதிரிகளிடம் இருந்து காத்து வெற்றியை பரிசாக தரும் தெய்வம் ஆக உள்ளார்.
- அம்பிகை வழிபாடு மீது ஆர்வம் கொண்டவர்கள் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, மூகாம்பிகை, கருமாரி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை வைத்துக் கொள்ளலாம். இது தவிர உங்களுக்கு இஷ்ட தெய்வங்களின் படங்களை வைத்த்துக் கொள்ளலாம்.
பூஜை அறையில் வைக்க கூடாத படங்கள்
- பூஜை அறையில் பிரம்மச்சாரி கடவுள்களான ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் படங்களை வைக்க கூடாது. அப்படி வைக்கும் பட்சத்தில் தீட்டு படாத இடத்தில் இந்த படங்களை வைக்க வேண்டும்.
- அதே போல் காளி, மகிஷாசூர மர்த்தினி, சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவி, உக்கிர நரசிம்ம மூர்த்தி ஆகிய தெய்வங்களை வைக்க கூடாது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த தெய்வங்கள் கையில் ஆயுதம் எடுத்து கோபம் கொண்டதற்கு காரணமே தன்னை நம்பிய பக்தர்களை காக்க வேண்டும் என்ற கருணையோடுதான் என்பதால் இந்த தெய்வங்களை தாராளமாக வழிபடலாம். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் வழிபாடு செய்ய வேண்டும்.
- குலதெய்வங்களுக்கு படம் இருக்கும் போது, அதை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். படம் இல்லாத குலதெய்வத்தை வழிபாடு செய்பவர்கள் தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து சிறப்பு.
- நவக்கிரங்கள் மற்றும் சனி பகவான் உள்ளிட்டோரின்படங்களை தவிர்க்க வேண்டும்.
- குடும்பத்தில் மறைந்த முன்னோர்களின் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது தவிர்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
