Tamil New year: புத்தாண்டில் 6 கோடி மதிப்பில் அம்பிகை அலங்காரம் எங்க தெரியுமா?
Coimbatore: 2000,500,200,100,50 ரூபாய் நோட்டுகளை கொண்டு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கோவை காட்டூர் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 3.50 கோடி பணத்தால் அம்மன் சிலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று தமிழ் வருட பிறப்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கோவையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவில் சிறப்பு வழிபாடுகள், சுவாமி அலங்காரம் என கோயில்கள் களைகட்டி உள்ளது . அதிகாலை முதல் மக்கள் நீராடி புத்தாடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் இதன் ஒரு பகுதியாக காட்டூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் கோயிலில் சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் அம்மனுக்கு பணத்தால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 2000,500,200,100,50 ரூபாய் நோட்டுகளை கொண்டு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் பழங்கள், பூக்கள் வைக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது .
இந்நிலையில் அம்மன் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட நகை மற்றும் பணத்தின் மதிப்பு மொத்தம் சுமார் 6 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனலட்சுமி அலங்காரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வைக்கபட்டது. பணம் , தங்கநகை, தங்க நாணயங்களுடன், பூக்கள் ,பழங்கள் வைத்து தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்