Sani Pradosha Fast: வரும் ஆகஸ்ட் 31ல் சனி பிரதோஷ விரதம்.. புத்திர பாக்கியம் தரும் விரத கதை
Sani Pradosha Fast: வரும் ஆகஸ்ட் 31ல் சனி பிரதோஷ விரதம் மற்றும் புத்திர பாக்கியம் தரும் விரத கதை பற்றி அறிவோம்.
Sani Pradosha Fast: மாதத்தின் இரண்டு திரயோதசி தேதிகளில் ’பிரதோஷ விரதம்’ அனுசரிக்கப்படுகிறது. இவ்விதமாக ஒரு வருடத்தில் 24 பிரதோஷ விரதங்கள் உள்ளன. இந்து நாட்காட்டியின்படி பத்ரபத மதத்தின் கிருஷ்ண திரயோதசியில், இந்த மாதத்தின் முதல் பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படுகிறது.
மகாதேவர் மற்றும் பார்வதி தேவியைப் பிரதோஷ விரதத்தில் வணங்குகிறார்கள். பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பதன் மூலம், சிவபெருமான் தனது பக்தர்களின் அனைத்து துக்கங்களையும் துன்பங்களையும் நீக்குகிறார்.
இந்து நாட்காட்டியின்படி, பத்ரபத மாத கிருஷ்ண பட்சத்தின் திரயோதசி திதி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதிகாலை 2.25 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 1ஆம் தேதி அதிகாலை 3.40 மணிக்கு பிரதோஷம் முடிவடையும்.
பிரதோஷ காலத்தின்போது வழிபட வேண்டிய பிரதோஷ விரதம் முக்கியமானது என்பதால், ஆகஸ்ட் 31ஆம் தேதி பத்ரபத பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படும்.
சனி பிரதோஷ விரத கதை:
சனி பிரதோஷ விரத கதை பண்டைய கால நிகழ்வாகும். சேத் என்பவர் செல்வச்செழிப்பும் புகழும் நிறைந்தவராக இருந்தார். மேலும் சேத் மிகவும் அன்பானவராக இருந்தார். அவரைப் பார்க்க வருபவர்கள் யாரும் வெறுங்கையுடன் திரும்பவில்லை. அனைவருக்கும் சேத் தானம் வழங்குவது வழக்கம்.
இருப்பினும், சேத்தும் அவரது மனைவியும் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தனர். அதற்குக் காரணம் புத்திர பாக்கியம் இல்லாததுதான்.
ஒரு நாள் தீர்த்த யாத்திரை செல்ல முடிவு செய்த சேத் தனது வேலையை வேலைக்காரர்களிடம் ஒப்படைத்தார். அப்படி அவரும் அவரது மனைவியும் நகரத்தை விட்டு வெளியே சென்றிருந்தபோது, ஒரு பெரிய மரத்தடியில் ஒரு சமாதியில் ஒரு அற்புதமான துறவியைக் கண்டார்.
சேத் மற்றும் அவரது மனைவி, அந்த துறவியின் ஆசீர்வாதத்தைப் பெற்று, முன்னோக்கிய பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தார்.
சனி பிரதோஷம் இருந்தால் கிடைக்கும் புத்திர பாக்கியம்:
கணவன், மனைவி இருவரும் கைகூப்பி, துறவியின் முன் அமர்ந்து அவர் கண் விழிக்கும்வரை காத்திருந்தனர். காலை முதல் மாலை வரை ஆனது. பின்னர் இரவு, ஆகியும் துறவியின் கண் திறக்கவில்லை. இருப்பினும், சேத் மற்றும் அவரது மனைவி கைகூப்பி பொறுமையாக அமர்ந்திருந்தனர். இறுதியாக, மறுநாள் காலை துறவி கண்விழித்துப் பார்த்தார்.
சேத்தின் மனைவியைக் கண்டதும் மெல்லிய புன்னகையுடன் ஆசீர்வாதம் செய்வது போல் கையை உயர்த்தி, வத்சா, உன் உள்மனதின் கதையை நான் உணர்ந்தேன் என்றார். உங்கள் பொறுமையும் பக்தியும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும்; துறவி குழந்தை பெற சனி பிரதோஷம் விரதம் இருக்கும் முறையை அவருக்கு விளக்கினார்.
யாத்திரை முடிந்ததும் இருவரும் வீடு திரும்பி சனி பிரதோஷத்தை தவறாமல் நோன்பு நோற்கத் தொடங்கினர். பின்னர், சேத்தின் மனைவி ஒரு அழகான மகனைப் பெற்றெடுத்தார். சனி பிரதோஷ விரதத்தின் தாக்கத்தால், துன்பம் என்னும் இருள் நீங்கி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்