Numerology Horoscope: செப்டம்பர் 5ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?-numerology horoscope 5 september 2024 discover who will be lucky or unlucky on 3st september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: செப்டம்பர் 5ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Numerology Horoscope: செப்டம்பர் 5ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Kathiravan V HT Tamil
Sep 04, 2024 03:25 PM IST

Numerology Horoscope: எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது.

Numerology Horoscope: செப்டம்பர் 5ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
Numerology Horoscope: செப்டம்பர் 5ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை கொண்டு ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும் என்பது போலவே நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது.

இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.

எண் 1 

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் சாதகமான நாளாக கருதப்படுகிறது. குடும்ப உறுப்பினர் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு, அதிர்ஷ்டமான எண் 3. 

எண் 2 

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்று பிஸியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயங்களில் கவனமாக இருக்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 1, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்  ஆகும். 

எண் 3 

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறை ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் பணியை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுவது நல்லது. வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட நிறமாக பச்சை ஆகும்.

எண் 4 

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். சிலருக்கு உடல்நலம் தொடர்பான சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 7,  அதிர்ஷ்ட நிறம் நீலம்.

எண் 5 

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் காதல் நிறைந்த நாளாக இருக்கும். திருமணமான தம்பதிகள் உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த நாளில் செய்யும் செலவுகளில் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு ஆகும். 

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் தொழிலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அலுவலக அரசியல் காரணமாக உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட நிறம் அடர் நீலம்.

எண் 7 

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தொழில், காதல், குடும்பம், பணம் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

எண் 8 

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதை முடிந்தவரை குறைந்த்துக் கொள்ளுங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.  இன்று உங்கள் அதிர்ஷ்ட எண் 3, அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு நிறம்.

எண் 9 

ஒன்பாதம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4, அதிர்ஷ்ட நிறமாக வானம் நீலம் ஆகும். 

டாபிக்ஸ்