Numerology Horoscope: செப்டம்பர் 18ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?-numerology horoscope 17 september 2024 discover who will be lucky or unlucky on 3st september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: செப்டம்பர் 18ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Numerology Horoscope: செப்டம்பர் 18ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Kathiravan V HT Tamil
Sep 17, 2024 03:05 PM IST

ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதமும் ஒரு நபரின் எதிர்காலம், இயல்பு மற்றும் ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு பெயருக்கு ஏற்ப ஒரு ராசி இருப்பதைப் போலவே, எண் கணிதத்திலும் ஒவ்வொரு எண்ணுக்கு ஏற்ப எண்கள் உள்ளன.

Numerology Horoscope: செப்டம்பர் 18ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
Numerology Horoscope: செப்டம்பர் 18ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆனது நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். தொழில் அடிப்படையில் உங்கள் இலக்குகளை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். பண பரிவர்த்தனை செய்யும் போது எச்சரிக்கை உடன் இருங்கள். உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 7, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. 

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வழக்கமான ஒன்றாக இருக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க தியான பயிற்சி செய்யுங்கள். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் செலவிடுவது உங்களுக்கு நல்லது. இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 4, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் ஆச்சரியங்கள் இருக்கும், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்திருங்கள். உங்கள் படைப்பாற்றல் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 1, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சி உடன் நாட்களை கழிப்பீர்கள். உங்கள் துணைக்கு உதவ வீட்டு வேலைகளுடன் கைகோர்க்கவும். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 9, அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனம் உடன் இருப்பது முக்கியம். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். இன்று ஆபத்தான முதலீடுகள் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட நிறம் பச்சை.

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறந்த நாளாக இருக்கும். உங்கள் நேர்மறை ஆற்றலை சரியாக பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உங்கள் வாழ்க்கையில் சமநிலையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட நிறம் ஊதா. 

 

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பணிச்சுமைக்கு இடையே ஓய்வுக்கு சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட நிறம் நீலம்.

எண் 8 

எட்டாம் எண்ணில் உள்ளவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். பணவரவு முன்பை விட நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட நிறம் பழுப்பு.

எண் 9 

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். தொழில் விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்கும் முன் கவனமாக சிந்தியுங்கள். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கிற்கு நேரம் கொடுங்கள். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட நிறம் பச்சை.

Whats_app_banner

டாபிக்ஸ்