Numerology 22 August 2024: ’பட்டது திருமாலின் பார்வை! இன்று பணம் பார்க்கபோவது யார்?’ இன்றைய நாளின் நியூமராலஜி பலன்கள்!-numerology 22 august 2024 numerology predictions for august 22 2024 discover what the numbers say about your day - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology 22 August 2024: ’பட்டது திருமாலின் பார்வை! இன்று பணம் பார்க்கபோவது யார்?’ இன்றைய நாளின் நியூமராலஜி பலன்கள்!

Numerology 22 August 2024: ’பட்டது திருமாலின் பார்வை! இன்று பணம் பார்க்கபோவது யார்?’ இன்றைய நாளின் நியூமராலஜி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Aug 22, 2024 06:00 AM IST

Numerology Horoscope 22 August 2024: எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology 22 August 2024: ’பட்டது திருமாலின் பார்வை! இன்று பணம் பார்க்கபோவது யார்?’ இன்றைய நாளின் நியூமராலஜி பலன்கள்!
Numerology 22 August 2024: ’பட்டது திருமாலின் பார்வை! இன்று பணம் பார்க்கபோவது யார்?’ இன்றைய நாளின் நியூமராலஜி பலன்கள்!

எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.

ஆகஸ்ட் 22 அன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான நாளாக இருக்கும். இந்த நாளில் நீங்கள் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வாய்ப்புகள் உங்கள் முன் காத்து இருக்கின்றது. 

குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுவது உங்கள் மன ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், அதிர்ஷ்ட எண் 4 ஆகும். 

எண் 2

எண் 2-ஐ நியூமராலஜி எண்ணாக கொண்டவர்களுக்கு வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழலாம். எந்த சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தாலும் நேர்மறை சிந்தனை உடன் இருங்கள். இந்த நாளில் பணத்தை கவனமுடன் செலவு செய்யுங்கள். எந்த விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 7,  அதிர்ஷ்ட நிறம் சிவப்பு ஆகும். 

எண் 3

3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் கடும் பணி சுமையாக இருக்கும். தொழிலைப் பொறுத்தவரை, உங்கள் திறமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறையான வதந்திகள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம். முடிந்தவரை வெளி உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். காதல் வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்படலாம், ஆனாலும் அதனை திறம்பட சமாளிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட நிறம் நீலம். 

எண் 4

4ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நேர்மறை ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். பண விஷயத்தில் சிலருக்கு நல்ல செய்திகள் வரலாம். ஆனால் இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக பணத்தை முதலீடு செய்ய வேண்டும். விருந்தினர்கள் வீட்டிற்கு வரலாம். சிலர் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 12, அதிர்ஷ்ட நிறம் வெள்ளி நிறம். 

எண் 5

5ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இன்று சில சிக்கல்களை உணர நேரிடலாம். தொழில், பணம், காதல், உடல்நலம், குடும்ப விவகாரங்களை நேர்மறை உடன் அணுகுவது அவசியம். உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மன அழுத்தம் தரும் வேலைகளை தவிர்க்கவும். இன்று உங்களின் அதிர்ஷ்ட எண் 9, அதிர்ஷ்ட நிறம் பழுப்பு நிறம். 

எண் 6

6ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். காதல் உறவுகள் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணத்தை நோக்கி செல்லும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பண முதலீடுகளை பொறுத்தவரை ஆலோசனையோ அல்லது ஆராய்ச்சியோ இல்லாமல் செய்யக்கூடாது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு நிறம் ஆகும். 

 

எண் 7

7ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தாழ்வுடன் கூடியதாக இருக்கலாம். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். காதல் வாழ்க்கையிலும் சில சிக்கல்கள் வந்து போகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இன்று உங்களின் அதிர்ஷ்ட எண் 11, அதிர்ஷ்ட நிறம் ஊதா. 

எண் 8 

8ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் காதல் நிறைந்த நாளாக இருக்கும். சிலருக்கு காதல் கைக்கூடும். காதலில் பிரிவை சந்தித்த சிலர் மீண்டும் இணைவார்கள். சிலருக்கு வேலை சம்பந்தமாக மேலதிகாரியின் கண்டிப்பும் ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

எண் 9 

9ஆம் எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். சில பழைய முதலீடுகள் நல்ல பலனைத் தரும். சிலருக்கு உடல்நிலை மோசமாகலாம். எனவே, நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே கூடாது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில், உங்கள் தொழிலில் கவனத்தை அதிகரிக்க வேண்டும். இன்று உங்களின் அதிர்ஷ்ட எண் 3,  அதிர்ஷ்ட நிறம் பச்சை.