Story of Song Kadhal Pisase: கடிந்த வித்யாசாகர்..திட்டி தீர்த்த யுகபாரதி - காதல் பிசாசே பாடல் உருவான சுவாரஸ்ய பின்னணி
Story of Song Kadhal Pisase: பாடலாசிரியர் யுகபாரதியை, வித்யாசாகரிடம் இயக்குநர் லிங்குசாமி அறிமுகம் செய்தபோது அவநம்பிக்கையுடனே பேசியுள்ளார். இதனால் கடுப்பாகி வித்யாசாகரை திட்டி தீர்த்தவாறு காதல் பிசாசே பாடல் வரிகளை எழுதியுள்ளாராம்.
ஒவ்வொரு சினிமா உருவாக்கத்தின் பின்னணியிலும் ஏராளமான கதைகள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பிடித்திருக்கும். இதை பற்றி அந்த படத்தின் இயக்குநர், உதவி இயக்குநர்களை கேட்டால் பக்கம் பக்கமாக கூறுவார்கள்.
அந்த வகையில் சினிமாக்களில் இடம்பிடிக்கும் பாடல்களின் பின்னணியிலும் ஏராளமான கதைகள் இருக்கின்றன. பாடல் உருவாக்கித்தில் வரிகள் எழுதுவதில் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர்களுக்கு இடையே மிக பெரிய அளவில் பரிமாற்றங்கள் நிகழ்த்து இருப்பதை கேள்வி பட்டிருக்கலாம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பட்டிதொட்டி யெங்கும் ஒலித்த சூப்பர் ஹிட் பாடலாக மாதவன் - ரீமாசென் நடித்த ரன் படத்தில் இடம்பிடித்திருக்கும் காதல் பிசாசே பாடல் உள்ளது. தமிழில் சிறந்த ஃபாஸ்ட் பீட் மெலடி பாடலான இதற்கு யுகபாரதி பாடல் வரிகள் எழுத வித்யாசாகர் இசையமைத்திருப்பார். பாடல் உதித் நாரயணன், சுஜாதா மோகன் பாடியிருப்பார்கள்.
ரசிகர்களின் பேவரிட் பாடலாக அமைந்திருக்கும் காதல் பிசாசே உருவான விதம் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி நிகழ்ச்சி ஒன்றில் விவரித்து பேசியுள்ளார். அந்த பாடலின் சுவாரஸ்ய பின்னணி பற்றி விரிவாக அவர் சொல்லியிருப்பார்.
இந்த பாடல் எழுதுவதற்கு முன் வித்யாசாகரிடம், பாடலாசிரியர் யுகபாரதியை, இயக்குநர் லிங்குசாமி அறிமுகம் செய்தார். அப்போது யுகபாரதியை பார்த்து இவர் பாடல் எழுதவிடுவாரா என்ற அவ நம்பிக்கையிலேயே பேசியுள்ளாராம். அந்த உரையாடலில் வித்யாசாகர் பேச்சு கடிந்து கொள்ளும் விதமாகவே இருந்துள்ளது. இதன் பின்னரே இந்த பாடல் உருவாகியுள்ளது.
காதல் பிசாசே பாடல் உருவான விதம்
"காதல் பிசாசே காதல் பிசாசே ஏனோ செளக்கியம் பரவாயில்லை என்ற வரிகளை எழுதியாச்சு. அதன் பிறகு எவ்வளவு யோசித்தும் வரிகள் எழுத தெரியல. இந்த பாடலில் இருக்கும் அனைத்து வரிகளும் இசையமைப்பாளர் வித்யாசாகரை திட்டிதான் எழுதினேன்.
நீங்கள் எழுதிட்டுவாங்க, இசையமைக்கிறேன். கடிதம் எழுதும் சிச்சுவேசன், அன்புள்ள என்ற வார்த்தையில் தொடங்ககூடாது. வித்தியாசமாக சிந்தியுங்கள் என சொன்னார்.
நான் எழுதக்கூடாது என்றே அப்படி அவர் சொல்கிறார் என்றே நினைத்தேன். வழக்கமாக காதல் பாடலில் இருக்கும் நான் இங்கு நலம், சாப்பிட்டயா போன்ற வார்த்தகைளும் இருக்ககூடாது என்றார்.
சுமார் முக்கால் மணி நேரம் இந்த உரையாடல் நடக்கிறது. ரொம்பவும் பொறுத்து பார்த்த நான் இதற்கு மேல் முடியாது என வேறு மியூசிக் டைரக்டரை இந்த படத்துக்கு பார்த்துக்கோங்க என இயக்குநர் லிங்குசாமியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
பல்லவி உருவாகியது
இரவு 10 மணி அளவில், லிங்குசாமி என்னிடம் போன் செய்து ஆசுவாசப்படுத்தினார். நீங்கள் கோபித்துக்கொண்ட எழுதாமல் இருக்க வேண்டாம். அவர் சொன்னது போல் ஏதாவது யோசியுங்கள். இன்னொருவர் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு உங்கள் வளர்ச்சியை பாதிப்பதுபோல் இருந்தால் அதை வெளிக்காட்டாதீர்கள் என வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முக்கியமான விஷயத்தை சொன்னார். நீங்கள் எழுதிய பாடலை அவர் நிராகரிக்கட்டும் என்று கூறினார்.
பின்னர் சித்தர் மனநிலை ஏற்பட சித்தர் புத்தகத்தை படித்தேன். அன்பு மிகும்போது மரியாதை குறைவது இயல்புதான். அதை வைத்து யோசிக்கும் போது காதல் பிசாசே வரிகள் தோன்றியது.
நண்பர் என்னிடம் போன் பேசும்போது ஏதோ இருக்கேன் என்ற பதில் கூறினேன். இந்த பேச்சில் இருந்து ஏதோ செளகியம் என்ற அடுத்த வரியை எழுதிட்டேன்.
தனிமைகள் பரவாயில்லை, தவிப்புகள் பரவாயில்லை என்பது நான் இருந்த தனிமை, வரிகள் எழுத முடியாமல் இருந்த தவிப்பை வெளிப்படுத்தும் விதமாக சேர்த்தேன். இதே வழியில்தான் இரவுகள், இம்சைகள் பரவாயில்லை வரிகளை சேர்த்தேன்.
காலையில் நண்பர் ஒருவருடன் கம்போசிங் சென்றபோது கார் மீது மோதி லேசான விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் இப்படியே செத்துப்போனால் பரவாயில்லை என்ற வரிகளை சேர்த்தேன். இப்படி பல்லவி எழுதிமுடித்தேன்.
கட்டித்தழுவிய வித்யாசாகர்
இதைத்தொடர்ந்து ஆட்டோ பிடித்து அங்கு சென்றேன். ஒரே பேப்பரில் எழுதியிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார் இயக்குநர் லிங்குசாமி. வித்யாசாகர் வாங்கி அதை படித்தவுடன் என்னை அழைத்து கட்டியணைத்து எனது இசையில் அனைத்து படங்களிலும் நீ பாடல் எழுதுவாய் என்றார்.
உன்னை நேத்து கடிந்து கொண்டதன் விளைவால் இவ்வளவு சிறப்பான வரிகளை எழுதியுள்ளாய் என்றார். அதன் பிறகு வித்யாசாகர் இசையில் மட்டும் 300 பாடல்கள் எழுதியுள்ளேன்" என்று பாடலாசிரியர் யுகபாரதி கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்