மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நவ.11ஆம் தேதி உங்களுக்கு ராசி பலன்கள் எப்படி இருக்கும்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நவ.11ஆம் தேதி உங்களுக்கு ராசி பலன்கள் எப்படி இருக்கும்?

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நவ.11ஆம் தேதி உங்களுக்கு ராசி பலன்கள் எப்படி இருக்கும்?

Marimuthu M HT Tamil Published Nov 10, 2024 05:18 PM IST
Marimuthu M HT Tamil
Published Nov 10, 2024 05:18 PM IST

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நவ.11ஆம் தேதி உங்களுக்கு ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நவ.11ஆம் தேதி உங்களுக்கு ராசி பலன்கள் எப்படி இருக்கும்?
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நவ.11ஆம் தேதி உங்களுக்கு ராசி பலன்கள் எப்படி இருக்கும்?

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்: பணியிடத்தில் உங்கள் மேலதிகாரியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நவம்பர் 11ஆம் தேதி உங்கள் பணத்தை கவனமாக கையாளுங்கள். நவம்பர் 11ஆம் தேதி காதல் உறவுகளில் பல சாதகமான விஷயங்கள் தென்படும். பொறுமையையும் நிதானத்தையும் பின்பற்றினால் வெற்றி உறுதி. 

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களே, சிறந்த எதிர்காலத்திற்காக பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகித்து செலவழியுங்கள். தொழிலில் உற்பத்தித்திறனில் கவனம் செலுத்துவது முக்கியம். உங்கள் இல்வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அதேபோல், நீங்கள் கடந்த காலத்தில் நடந்த தவறுகளையே நினைத்து வருத்தப்படாதீர்கள். அதில் இருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டம் என்பதை மட்டும் பாருங்கள். 

மிதுனம்: 

சமீபத்தில் கணவர் அல்லது மனைவியைப் பிரிந்த மிதுன ராசிக்காரர்கள் நவம்பர் 11ஆம் தேதி, இரண்டாம் பாதியில் இல்வாழ்க்கைத் துணை ஒருவரைக் காணலாம். பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொறுமை முக்கியம். கோபத்தைக் குறைப்பது நல்லது. 

கடகம்: பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்த நாளாக இருக்கும். வேலை விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில் எந்தக் கெடுதலும் ஏற்படாது. ஆரோக்கியமான உணவுகளை ஜூஸ்களை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய பிறரின் தவறான புரிதல்கள் மாறும் காலம் இது. 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்கள் இந்த நாளில் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட வேண்டும். சில மேலாளர்கள் மற்றும் குழுத் தலைவர்களின் வாழ்க்கை குழப்பமாக இருக்கும். சிறிய நிதிப் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், வழக்கமான பாதிப்பு இருக்காது. ஒவ்வொரு வார்த்தையையும் பேசும்போது, ஒரு தடவைக்கு இருதடவை யோசித்துப் பேசுங்கள். 

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அலுவலக அரசியலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவைப் பின்பற்றி தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். புறம்பேசுபவர்களுடன் கூட்டுசேராதீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner