ரிலையன்ஸ் நிறுவனம் சரிவு.. 2024 பெரிய இழப்பு.. பட்டியலில் கீழ் இறங்கிய முகேஷ் அம்பானி.. நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ரிலையன்ஸ் நிறுவனம் சரிவு.. 2024 பெரிய இழப்பு.. பட்டியலில் கீழ் இறங்கிய முகேஷ் அம்பானி.. நடந்தது என்ன?

ரிலையன்ஸ் நிறுவனம் சரிவு.. 2024 பெரிய இழப்பு.. பட்டியலில் கீழ் இறங்கிய முகேஷ் அம்பானி.. நடந்தது என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 11, 2024 06:00 AM IST

Mukesh Ambani: உலக பணக்காரர்களின் பட்டியலில் 16 ஆவது இடத்தில் இருந்தார் முகேஷ் அம்பானி. தற்போது ஏற்பட்ட பெரும் இழப்புகள் காரணமாக 17வது இடத்திற்கு வந்துள்ளார். இந்த 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் நிறுவனம் சரிவு.. 2024 பெரிய இழப்பு.. பட்டியலில் கீழ் இறங்கிய முகேஷ் அம்பானி!
ரிலையன்ஸ் நிறுவனம் சரிவு.. 2024 பெரிய இழப்பு.. பட்டியலில் கீழ் இறங்கிய முகேஷ் அம்பானி!

இந்தியாவின் மாபெரும் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இதன் உரிமையாளராக முகேஷ் அம்பானி இருந்து வருகிறார். உலகத்தில் இருக்கக்கூடிய பணக்காரர் பட்டியலில் ஒருவராகவும், இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரராக இவர் திகழ்ந்து வருகின்றார்.

இந்த 2024 ஆம் ஆண்டில் கடந்த சில மாதங்களாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் எதிர்ப்பு மிகப்பெரிய உச்சத்தில் இருந்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 50 பில்லியன் டாலர் வரை இழப்பை சந்தித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் வீழ்ச்சி

இந்த 2024 ஆம் நடப்பு ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு மதிப்பு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பென்ச் மார்க் குறியீடாக திகழ்ந்துவரும் என்எஸ்ஈ நிஃப்டி 50 குறிவிட்டை ஒப்பிடும்பொழுது ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி சற்று குறைவாகவே இருந்து வருகிறது.

இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த முதலீட்டாளர்களும், வெளிநாட்டில் இருந்து முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து இருந்த பெரிய தொகைகளை திரும்ப பெற்றுவிட்டனர். அதேபோல தங்களிடமிருந்த கோடிக்கணக்கான பங்குகளை விற்பனை செய்து விட்டனர். அந்த அளவிற்கு பங்குச்சந்தை மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்து வருகிறது.

இந்தியாவின் பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவில் இருக்கின்ற காரணத்தினால் தான் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு மிகவும் குறைந்து விட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆறாவது காலாண்டு முடிவுகள் பொறுத்தளவில் அவர்கள் நினைத்த வளர்ச்சியை பெற முடியவில்லை. இதனை அந்த நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டுக்கான முடிவுகள் கூறுகின்றன.

பணக்காரர்கள் பட்டியல்

இந்த இழப்புகளுக்கான முக்கிய காரணம் ரசாயன தொழில் மற்றும் எண்ணெய் உள்ளிட்டவைகளின் தேவை குறைந்து இருப்பது தான். இது மட்டும் காரணமாக அமைந்து விட முடியாது. இதுவும் ஒரு காரணமாகும். இதன் காரணமாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. இதனால் 2.72 பில்லியன் டாலர்கள் முகேஷ் அம்பானியின் சொத்துக்கணக்கில் குறைந்துள்ளது.

100 பில்லியன் டாலருக்கு மேல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது 98.8 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. உலக பணக்காரர்களின் பட்டியலில் 16 ஆவது இடத்தில் இருந்தார் முகேஷ் அம்பானி. தற்போது ஏற்பட்ட பெரும் இழப்புகள் காரணமாக 17வது இடத்திற்கு வந்துள்ளார். இந்த 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார் முகேஷ் அம்பானி.

Whats_app_banner