Mercury Transit : ‘வெச்சு செய்யப்போகிறார் புதன்’ - இந்த ராசிக்காரர்கள் கவனமா இருங்க மக்கா!
Mercury Transit : புதன் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. பல ராசிக்காரர்களுக்கு நல்லது என்றாலும், சில ராசிக்காரர்களுக்கு சில சிரமங்கள் இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் அறிவுக்கும், ஞானத்துக்கும், புத்திக்கூர்மைக்கும் காரணமாக இருப்பது புதன் கிரகம். இதை ‘வித்யாகாரகன்’ என்று அழைக்கிறார்கள். ஒருவர் புத்திசாலியாக இருக்க வேண்டுமென்றால் அவரது ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் படிப்பு, தொழில், துறை ஆகியவற்றிற்கு காரணமாக இருப்பவர் புதன். இந்த கிரகத்தின் ஆசி பெற்றவர்கள் அறிவாளிகளாக, விஞ்ஞானிகளாக இருப்பார்கள். அந்த புதன் கிரகம் மாறும்போது சிலருக்கு மாற்றங்கள் ஏற்படும். அவை என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி புதன் தற்போது சிம்ம ராசியில் சஞ்சரித்து வருகிறார். ஆனால் கிரகத்தின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது.
மேஷம்
மேஷ ராசிக்கு 5ம் வீட்டில் புதன் இருக்கும்போது சில பிரச்னைக வரலாம். குறிப்பாக குழந்தைகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் வரலாம்.
ரிஷபம்
சில நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். புதன் சஞ்சாரத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு சில தோஷங்கள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சரியான கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் செலவு செய்வது நல்லதல்ல.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் புதன் 3ம் வீட்டில் இருக்கும்போது. புதன் சஞ்சாரத்தால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கவும். சண்டை சச்சரவுகளை உண்டாக்கும் காரியங்களைச் செய்யாமல் இருப்பதும், வார்த்தைகளை விளையாடாமல் இருப்பதும் நல்லது. எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கருத்துக்கள். துல்லிய விவரங்களுக்கு சரியான நிபுணர்களை அணுகுவதே சிறந்தது)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்