விருச்சிகத்துக்குள் நுழைந்த செவ்வாய்.. இந்த மூன்று ராசிக்கு நல்ல செய்தி கூடிய விரைவில் வரும்!
செவ்வாயினால் சுமார் 45 நாட்களுக்கு அறுவடை செய்யப்போகும் மூன்று ராசிகள் குறித்து காண்போம்.
நவகிரகங்கள் 12 ராசியின்மீது சஞ்சரிக்கும்போது ஒவ்வொரு விதமான நன்மை, தீமைகள் கிடைக்கின்றன. அந்த வகையில், மேஷம் மற்றும் விருச்சிகராசிகளின் அதிபதியான செவ்வாய், நவம்பர் 16ஆம் தேதி, தனது பூர்வீக ராசியான விருச்சிகத்துக்குள் நுழைந்தார். ஆகையால் சில ராசிகள் மகிழ்ச்சியைச் சந்திக்கும்.
அப்படி நவம்பர் 16ஆம் தேதி முதல் பல நல்ல மாற்றங்களை செவ்வாயினால், சுமார் 45 நாட்களுக்கு அறுவடை செய்யப்போகும் மூன்று ராசிகள் குறித்து காண்போம்.
கடகம்
இந்த ராசியின் 5ஆம் வீட்டுக்கு செவ்வாய் புலம்பெயர்கிறார். இதனால், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும். அலுவலக அரசியலை சமாளிக்கும் திறன் பெறுவீர்கள். எதிரிகளை நேரிட்டு சந்திக்கும் தைரியம் அதிகரிக்கும். வட்டிக்கு விடும் தொழில் செய்பவர்கள், மனை விற்பனைதாரர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். பணியில்லாதவர்களுக்கு வேலை கிடைப்பது உறுதி
விருச்சிகம்
சொந்த ராசிக்கே செவ்வாய் இடம்பெயர்கிறார். இக்கால கட்டத்தில் இவர்களின் மனதில் இருந்த தயக்கங்கள் நீங்கும். மனை வாங்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உடல் ரீதியான உழைப்பினை மேற்கொள்ளும் ராசியினருக்கு கூடுதல் ஆதாயம் மற்றும் வருவாய் கிடைக்கும். அரசுத்துறையில் பணிக்கு முயற்சிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கூடிய விரைவில் வரும். பணியிடத்தில் உங்களது பணியின் திறமை வெளிப்பட்டு நிறுவனத்தினரால் அங்கீகரிக்கப்படுவீர்.
மீனம்
இந்த ராசியின் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். ஆகையால், நல்வாய்ப்பும் முழு ஆதரவும் இந்த ராசியினருக்கு உண்டாகும். உங்கள் தொழிலில் இருந்த சுணக்கம் விலகி, நல்லதொரு மாற்றம் ஏற்படும். முன்பு இருந்த பயந்த சுபாவம் இக்காலகட்டத்தில் மெல்ல நீங்கும். பணி தொடர்பான பயணங்களை செய்வீர்கள். அதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்