Nava Panchama Yoga: நவ பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாயும் சனியும்.. சுபிட்ச யோகம்பெற்று பணப்பெட்டியைத் தூக்கப்போகும் ராசிகள்
Nava Panchama Yoga: நவ பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாயும் சனியும்.. சுபிட்ச யோகம்பெற்று பணப்பெட்டியைத் தூக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Nava Panchama Yoga: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒன்பது விதமான கிரகங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமான ராசி மற்றும் நட்சத்திரங்களுக்குப் பெயர்ச்சியாகிறது. இதன் தாக்கம் இருக்கும் 12 ராசிகளிலும் பின்விளைவுகளை உண்டாக்கிவிடும். அதில் சில ராசிகள் அதிக நன்மைகளையும், பல ராசிகள் கெடுபலன்களையும் சந்திக்கலாம்.
ஜோதிட சாஸ்திரங்களின்படி உருவாகும் யோகங்களில் ஒன்று, நவ பஞ்சம யோகம். அதன்படி, சனிக்கு பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் பகவானும்; செவ்வாய் பகவானுக்கு ஒன்பதாம் வீட்டில் சனி பகவானும் இருப்பது நவ பஞ்சம ஸ்தானம் எனப்படுகிறது. அப்படி உருவாகும் யோகம், ‘நவ பஞ்சம யோகம்’ எனப்படுகிறது.
நவ பஞ்சம யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் உண்டாகிறது. அதிலும் மூன்று ராசிகளில் அதிக செல்வம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
நவ பஞ்சம யோகத்தினால் செல்வம்பெறும் மூன்று ராசிகள்:
துலாம்:
நவ பஞ்சம யோகத்தினால் செல்வம் பெறும் முக்கியமான ராசி, துலாம் ராசி. இந்த நவ பஞ்சம யோகத்தினால் துலாம் ராசியினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் பெருமை மற்றும் நல்ல பெயரைப் பெறுவார்கள். இந்த துலாம் ராசியினர், இந்த காலகட்டத்தில் பாசத்திற்குரிய விவகாரங்களில் ஆதரவும் வெற்றியும் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் எதிரிகளாய் இருந்தவர்கள் நண்பர்கள் ஆவார்கள். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து எல்லாம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்குப் பணம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு இருந்த மேல் அதிகாரிகளின் அழுத்தம் குறைந்து புதிய பதவிகள் வரும். துலாம் ராசியினர் வாழ்வில் இந்த காலம் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்:
நவ பஞ்சம யோகத்தினால் செல்வம் பெறும் முக்கியமான ராசி, மகரம். நவ பஞ்சம யோகத்தினால் மகர ராசியினரிடம் கடன் பெற்று தராமல் இழுத்தடிக்கும் நபர்கள் இந்த காலகட்டத்தில் பணத்தினைத் திருப்பித் தந்துவிடுவர். தொழிலில் இருந்து வந்த போட்டித்தன்மை சற்று குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். உங்களது தொழிலின் சேவை பலரால் நன்கு பாராட்டப்படும். ஊக வணிகங்களான பங்குச்சந்தை, லாட்டரி ஆகியவற்றில் முதலீடு செய்தால் கொஞ்சம் லாபத்தை இந்த நவபஞ்சம யோக காலத்தில் பெறலாம். பணியில் கடுமையான போராட்டங்களைச் சந்தித்த மகர ராசியினருக்கு இந்த காலம் மயிலிறகால் வருடும் பணியான காலம் ஆகும். இத்தனை நாட்களாக உங்களைக் குறைத்து மதிப்பிட்ட உங்கள் மேல் அதிகாரிகள், உங்களது கடும் உழைப்பினைக் கண்டு வியப்பார்கள். வெகுநாட்களாக வாங்க நினைத்தப்பொருட்களை வாங்குவீர்கள்.
கும்பம்:
நவ பஞ்சம யோகத்தினால் செல்வம் பெறும் முக்கியமான ராசி, கும்ப ராசி. இந்த காலகட்டத்தில் நவ பஞ்சம யோகத்தினால் வண்டி மற்றும் நிலம் என சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் தென்படுகிறது. சரியான நல்ல பெயர் இன்றி தவித்துவந்த நபர்களுக்கு சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். அயல்நாடு செல்லத் தொடர்ச்சியாக முயற்சித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
டாபிக்ஸ்