Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே-makaravilakku 2024 when is makara jyoti dharshan in sabarimala - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே

Makaravilakku 2024: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் எப்போது.. எப்படி தரிசிக்கலாம்? முழு விவரம் உள்ளே

Manigandan K T HT Tamil
Jan 14, 2024 07:47 PM IST

சுவாமி ஐயப்பன், ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதும் நம்பிக்கை.

மகர ஜோதி தரிசனம்
மகர ஜோதி தரிசனம்

சபரிமலையில் ஆண்டுதோறும் சங்கராந்தியன்று நடைபெறும் சிறப்பு பூஜை சபரிமலை மகரவிளக்கு என அழைக்கப்படுகிறது. மகர ஜோதி என்றும் இதை அழைப்பர். சுவாமி ஐயப்பன், ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதும் நம்பிக்கை.

மகர ஜோதி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். மகரப் பெயர்ச்சி நாளில் மலையில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். குறிப்பாக மகர ஜோதியை தரிசித்தால், அது உண்மையில் ஆகச் சிறந்த தருணம் என்று பக்தர்கள் உணர்கின்றனர்.

மகர ஜோதி

சபரிமலையின் மகர ஜோதி 2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். அப்படி இருந்தாலும் மகர ஜோதி மூன்று முறை காணப்படுகிறது. இதை பார்க்கும் ஐயப்ப பக்தர்கள் பரவசம் அடைந்து பக்தி பரவசத்துடன் கோஷமிடுவர். அன்றைய தினம் நமது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும், நினைத்தது கிடைக்கும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் பூஜையும் செய்யப்படுகிறது.

இம்முறையும் ஜனவரி 15 திங்கட்கிழமை மகர ராசிப் பெயர்ச்சியாகும். மகர ஜோதி தரிசனமும் நிகழவுள்ளது. மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை மூன்று முறை மகர தரிசனம் நடைபெறும் என கோயில் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

சபரிமலைக்கு மகர ஜோதியை தரிசிக்க வரவேண்டும் என்றால், முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், மலை ஏறுவதற்கு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அன்று நான்கு முதல் ஐந்து மடங்கு பக்தர்கள் அங்கு வந்து சேருவார்கள். ஆன்லைனில் வாய்ப்பு கிடைத்தால் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம்.

இம்முறை மகர தரிசன விவரங்கள் இதோ

சபரிமலை மகரவிளக்கு 2024 ஜனவரி 15 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை மகர ஜோதி தரிசனம் நிகழும்.

மகர ஜோதி தினத்தன்று வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. காவல் துறையும், பல்வேறு துறைகளும் பாதுகாப்புக்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

கோவிலிலேயே மகர ஜோதியை ஒரு சிலர் மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் நின்று பார்க்கும் வகையில் தொலைக்காட்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மகர ஜோதி தருணத்தை பல்வேறு சேனல்கள் மூலம் காண கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

டாபிக்ஸ்