Maha Parivarthanai Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ வாழ்கையில் உச்சம் தொடும் மகா பரிவர்த்தனை யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Maha Parivarthanai Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ வாழ்கையில் உச்சம் தொடும் மகா பரிவர்த்தனை யோகம் யாருக்கு?

Maha Parivarthanai Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ வாழ்கையில் உச்சம் தொடும் மகா பரிவர்த்தனை யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Sep 04, 2024 10:16 PM IST

Maha Parivarthanai Yogam: இரண்டு கிரகங்கள் தங்களுடைய சொந்த வீட்டை மாற்றிக் கொள்வதன் மூலம் இருவரும் ஆட்சி பெற்ற வலிமையை பெறுவதற்கு பரிவர்தனை என்று பெயர்.

Maha Parivarthanai Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ வாழ்கையில் உச்சம் தொடும் மகா பரிவர்த்தனை யோகம் யாருக்கு?
Maha Parivarthanai Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ வாழ்கையில் உச்சம் தொடும் மகா பரிவர்த்தனை யோகம் யாருக்கு?

பரிவர்தனை என்றால் என்ன?

இரண்டு கிரகங்கள் தங்களுடைய சொந்த வீட்டை மாற்றிக் கொள்வதன் மூலம் இருவரும் ஆட்சி பெற்ற வலிமையை பெறுவதற்கு பரிவர்தனை என்று பெயர். உதாரணமாக மேஷம் ராசியின் அதிபதியாக உள்ள செவ்வாய்யும். ரிஷபம் ராசியின் அதிபதியான சுக்கிரனும் உள்ளனர். இதில் சுக்கிரன் மேஷம் ராசியிலும், செவ்வாய் ரிஷபம் ராசியிலும் அமர்ந்து இருக்கும் போது பரிவர்தனை உண்டாகும். இந்த நிகழ்வில் இரண்டு கிரகங்களும் தமது சொந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்களை செய்வார்களோ அதன் அடிப்படையில் பலன்களை தருவார்கள். 

சாரப்பரிவர்தனை  என்றால் என்ன?

இரண்டு கிரகங்கள் தங்களின் நட்சத்திரங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் சார பரிவர்தனை உண்டாகின்றது. உதாரணமாக மிதுனம் ராசியில், ராகுபகவானின் நட்சத்திரம் ஆன திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பகவான் உள்ளார். துலாம் ராசியில் குருவின் நட்சத்திரம் ஆன விசாகம் நட்சத்திரத்தில் ராகு பகவான் உள்ளார். இதற்கு பெயர் சார பரிவர்தனை என்று பெயர். 

கிரக பரிவர்த்தனை பலன்கள்

கிரக பரிவர்தனையில் அமரும் கிரகங்கள் சொந்த வீட்டில் அமர்ந்ததற்கான பலன்களை ஜாதகருக்கு செய்வார்கள். இதனால் ஆட்சி பெற்ற கிரகங்களின் பலன் ஜாதகருக்கு கிடைக்கும். 

இந்த பரிவர்த்தனை அமைப்பில் எல்லா பரிவர்தனைகளும் சிறப்பை தருவது கிடையாது. இயற்கை பகை இல்லாத கிரகங்கள் பரிவர்தனை அடையும் போது முதல் தர யோகத்தை கொடுக்கும். 

உதாரணமாக ரிஷபம் ராசியில் சனி பகவானும், மகரம் ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து இருந்தால் இது நட்பு கிரகங்களுக்குள் ஏற்பட்ட பரிவர்தனையாக இருக்கும். இந்த அமைப்பு நல்ல பலன்களை தரும். 

ஆனால் சனி பகவான் கடகம் ராசியிலும், சந்திரன் மகரம் ராசியிலும் அமர்ந்து இருந்தால் பகைவர்களுக்கு இடையே நடக்கும் பரிவர்தனை ஆகும். ஆனால் இதனால் ஜாதகருக்கு பெரிய நன்மைகள் கிடைப்பது இல்லை.

மறைவு ஸ்தானங்கள் எனப்படும் 3, 6, 8, 12 ஆகிய 4 வீடுகளை தவிர்த்து மற்ற வீடுகளின் கிரகங்கள் பரிவர்தனை பெற்று இருப்பது யோகங்களை கொடுக்கும். 

பகை கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று பரிவர்த்தனை பெறுவது யோகத்திற்கு பதில் கெடு பலன்களை செய்யும், ஆசை காட்டி மோசம் போகும் நிலை ஏற்படலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner