Magaram Money Luck: மகரம் ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்! ஆட்டிப்படைத்த சனி அமைதியாகிறார்! அடுத்த 60 நாட்கள் சூப்பர்!-magaram rasipalangal astrological benefits in september and october key predictions - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Money Luck: மகரம் ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்! ஆட்டிப்படைத்த சனி அமைதியாகிறார்! அடுத்த 60 நாட்கள் சூப்பர்!

Magaram Money Luck: மகரம் ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்! ஆட்டிப்படைத்த சனி அமைதியாகிறார்! அடுத்த 60 நாட்கள் சூப்பர்!

Kathiravan V HT Tamil
Aug 21, 2024 05:44 PM IST

Magaram Rasi: இந்த கால கட்டத்தில் உங்கள் கடன், எதிரி, கவலை, நோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும். உங்களின் லாப ஸ்தானத்தை குருவும், சனியும் பார்ப்பதால் மிகப்பெரிய வெற்றிகள் காத்துக் கொண்டு இருக்கின்றது.

Magaram Money Luck: ஆட்டிப்படைத்த சனி அமைதியாகிறார்! அடுத்த 60 நாட்கள் சூப்பர்! மகரம் ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்!
Magaram Money Luck: ஆட்டிப்படைத்த சனி அமைதியாகிறார்! அடுத்த 60 நாட்கள் சூப்பர்! மகரம் ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்!

வரும் செப்டம்பர் மாத காலத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு உடலும், மனதும் வலுப்படும் காலமாக இருக்கும். பேச்சு, செயல், நிர்வாகத் திறமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, மரியாதை மேன்மை பெறும். உங்களின் முகப்பொலிவு கூடும். பண வரவு திருப்திகரமான முறையில் இருக்கும். வணிகம், வியாபாரம் உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். கடன் பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வழக்குகள் சாதகம் ஆகும். புதிய கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு கடன் கிடைக்கும். வாழ்கை போராட்டம் உங்களுக்கு வெற்றியை கொண்டு வரும். இந்த கால கட்டத்தில் உங்கள் கடன், எதிரி, கவலை, நோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரியங்கள் நடைபெறும்.  உங்களின் லாப ஸ்தானத்தை குருவும், சனியும் பார்ப்பதால் மிகப்பெரிய வெற்றிகள் காத்துக் கொண்டு இருக்கின்றது. 

அக்டோபர் 

அக்டோபர் மாதத்தை பெறுத்தவரை 2ஆம் வீட்டில் சனி பகவான் வக்ரம் பெற்று உள்ளார். 3ஆம் வீட்டில் ராகு உள்ளார். அக்டோப்ர் 9ஆம் தேதி அன்று 5ஆம் வீட்டில் உள்ள குரு வக்ரம் அடைகிறார். அக்டோபர் 17ஆம் தேதி வரை சூரியன், கேது உடன் சேர்ந்து உள்ளார். பின்னர் சூரியன் 10ஆம் வீட்டில் நீசம் அடைகிறார். 

இந்த மாதத்தில் சுக்கிரன், புதன் நல்ல நிலையில் உள்ளனர். செவ்வாய் பகவான் அக்டோபர் 20ஆம் தேதிக்கு பிறகு நீசம் அடைகிறார். 

இந்த கால கட்டத்தில் உங்கள் உடலும் மனதும் தெளிவாக இருக்கும். உங்களின் பேச்சும், செயல்பாடும் ஆணித் தரமாக இருக்கும். உங்கள் வாழ்கை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், நீண்ட கால தடைகள் நீங்கும். சொத்து வாங்கும் நிலை உண்டாகும். தொழில் யோகமான காலகட்டமான இந்த காலத்தில் லாபம் அதிகமாக இருக்கும். கூட்டாளிகள் உடன் ஒத்துப்போவது நல்லது. பயணங்கள் மகிழ்ச்சியை தரும். உணவு, ஆடை அணிகலன் சேர்க்கை, தூக்கம், இன்பம் சிறப்பாக இருக்கும். அக்டோபர் 13ஆம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு வருவதால் சிறப்பான பணவரவை ஏற்படுத்துவார். தந்தை உடன் பகைமை பாராட்ட வேண்டாம். அரசாங்கத்துடன் விரோதம் கூடாது. யாருடனும் போட்டி மற்றும் சண்டைகளில் ஈடுபடாதீர்கள். கவுரவ பிரச்னையாக எதையும் அனுகாதபட்சத்தில் மிகுந்த நன்மைகளை தரும் மாதமாக இது அமையும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.