Sani Peyarchi Palangal: முடிவுக்கு வரும் அர்தாஷ்டம சனி! விருச்சிகம் ராசிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!-sani peyarchi palangal 2025 ardhashtama sani ending for viruchigam rasi future benefits - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi Palangal: முடிவுக்கு வரும் அர்தாஷ்டம சனி! விருச்சிகம் ராசிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

Sani Peyarchi Palangal: முடிவுக்கு வரும் அர்தாஷ்டம சனி! விருச்சிகம் ராசிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

Kathiravan V HT Tamil
Aug 21, 2024 03:24 PM IST

Sani Peyarchi Palangal 2025: விருச்சிகம் ராசியில் சந்திரன் நீசம் பெறுவதால் இவர்களுக்கு இரக்க குணம் இயல்பாகவே இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். இவர்களுக்கு உடல் வலிமையை விட மனவலிமை கூடுதலாக இருக்கும்.

Sani Peyarchi Palangal: முடிவுக்கு வரும் அர்தாஷ்டம சனி! விருச்சிகம் ராசிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!
Sani Peyarchi Palangal: முடிவுக்கு வரும் அர்தாஷ்டம சனி! விருச்சிகம் ராசிக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

சனி பகவானின் பண்புகள் 

நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும். சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார். 

முடிவுக்கு வரும் அர்தாஷ்டம சனி 

விருச்சிகம் ராசிக்கு வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் முதல் அர்தாஷ்டம சனி முடிவுக்கு வருகின்றது. சனி பகவான் நின்ற இடம் விருத்தி, பார்த்த இடம் பாழ் என்று சொல்வார்கள். சனி பகவான் சஞ்சாரம் செய்யும் இடத்தில் அந்த வீட்டு ஆதிபத்தியத்தை பலம் பெற செய்வார். சனி பகவான் கொடுக்கும் செத்து அழியாத சொத்துக்களாக நிலைத்து இருக்கும். ஒருவரது சுய ஜாதகத்தில் சனி பகவான் வலுப்பெற்றவர்கள் நாடாளும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். 

விருச்சிகம் ராசியும் பண்புகளும்!

கால புருஷ தத்துவத்தில் 8ஆவது ராசியாக விருச்சிகம் ராசி உள்ளது. இந்த ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். விசாகம் நட்சத்திரம் 4ஆம் பாதம், அனுஷம் நட்சத்திரம் 4 பாதங்களும், கேட்டை நட்சத்திரம் 4 பாதங்களும் இந்த ராசிக்குள் வரும். 

விருச்சிகம் ராசியில் சந்திரன் நீசம் பெறுவதால் இவர்களுக்கு இரக்க குணம் இயல்பாகவே இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். இவர்களுக்கு உடல் வலிமையை விட மனவலிமை கூடுதலாக இருக்கும். இவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். பூமி மூலம் அதிக ஆதாயத்தை இவர்கள் பெறுவார்கள். 

சனி பகவானால் சந்தித்த சிக்கல்கள்

வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த இடம் விருச்சிகம் ராசிக்கு 5ஆம் இடமாகும்.  

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்கு அர்தாஷ்டம சனி தொடங்கியது. ராசிக்கு 4ஆம் இடமான கும்பம் ராசியில் அமர்ந்து உங்கள் ராசியை 10ஆம் பார்வையாக பார்த்து வருகின்றார். 

கடந்த மே மாதம் முதல் குரு பகவான் உங்கள் ராசியை பார்த்துக் கொண்டு இருக்கிறார். அர்தாஷ்டம சனி காலத்தில் சனி பகவான் நிறைய சங்கடங்களை கொடுத்து இருப்பார். 4ஆம் இடத்தின் ஆதிபத்யம் குறித்த விஷயங்களில் சங்கடங்கள் உண்டாகி இருக்கும். 

உங்களின் தாய்க்கு பல கஷ்டங்கள் ஏற்பட்டு இருக்கும். வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகி இருக்கும். முதலீடு போட்டு தொழில் செய்பவர்கள் நிறைய சங்கடங்களை அனுபவித்து இருக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் சிக்கல்கள் உண்டாகி இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பிரச்னைகள் ஏற்பட்டு நிம்மதியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும்.  

குருவின் பார்வையால் கிடைக்கும் நன்மைகள் 

குரு பகவான் உங்கள் ராசியை பார்த்துக் கொண்டு இருப்பது சிறப்புகளை ஏற்படுத்தும். சனி பகவான் மூலம் உண்டாகும் சங்கடங்கள் வரும் மார்ச் மாதத்திற்கு பிறகு முடிவுக்கு வரும். இந்த காலகட்டத்தில் குரு திசை மற்றும் குரு புத்தி நடக்கும் விருச்சிகம் ராசிக்கார்களுக்கு வாழ்கையில் ஏற்றம் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் கைக்கூடும். 4ஆம் இடம் பலம் பெறுவதால் உங்கள் தாயாருக்கு உடல் மற்றும் மன ரீதியாக இருந்த கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். 

மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெல்வார்கள். மனதில் மகிழ்ச்சி பிறக்கும். கணவன், மனைவி  இடையே இருந்த சிக்கல்கள் தீரும். செல்லும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் தேடி வரும். வண்டி வாகனம் மூலம் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை வாங்குவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். வேலையில் இருந்த குழப்பம் மற்றும் சிக்கல்கள் நீங்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.